SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

காற்றில் பறக்கும் அரசு உத்தரவு: சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்

2018-08-17@ 20:38:06

சிவகாசி: அரசின் உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டு சிவகாசியில் சரக்கு வாகனங்களில் ஆட்கள் ஏற்றி செல்வது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சரக்கு வாகனங்கள், லாரிகளில் ஆட்களை ஏற்றிச் செல்லக்கூடாது. ஆட்டோ, பஸ்களில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், திருமணம், காது குத்துதல் போன்ற விஷேச நிகழ்ச்சி, வேலைக்கு தொழிலாளர்களை சரக்கு வாகனங்களில் அளவுக்கு அதிகமாக ஏற்றி செல்வது தொடர்கிறது.

சிவகாசியில் சரக்கு வாகனங்களில் அதிகளவு பயணிகள் ஏற்றி செல்லப்படுகின்றனர்.  ஆனால், போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் இவற்றை கண்டுகொள்வதில்லை. அரசின் உத்தரவு காற்றில் பறப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அரசு உத்தரவை பின்பற்றாமல் விதி மீறும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

  • iranshooting_festiv0000

    ஈரானில் ராணுவ அணிவகுப்பில் தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்

  • beerfestiv_german123

    ஜெர்மனியில் உலகளவில் பிரசித்தி பெற்ற பியர் திருவிழா - களைகட்டிய உற்சாகம் !

  • china_harrvestingfestiv12

    சீனாவில் களைகட்டிய அறுவடைத் திருவிழா - கோலாகலமாக கொண்டாடப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்