SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அணைகளுக்கான நீர்வரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்: 2 நாட்களில் குமரியை மிரட்டிய வெள்ளம்

2018-08-17@ 19:45:20

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் அணைகளுக்கான நீர்வரத்தில் ஏற்பட்ட அதிகரிப்பால் கடந்த 2 நாட்களாக பெரும் பரபரப்பு நிலவியது.
* 14ம் தேதி மாலை முதல் பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்படுகின்ற தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
* 15ம் தேதி அதிகாலை காலை 5.30க்கு பெருஞ்சாணிக்கு அணைக்கு வினாடிக்கு 29,920 கன அடி தண்ணீர் 30,360 கன அடி தண்ணீர் மறுகால் வழியாக திறந்து விடப்பட்டிருந்தது.
* 15ம் தேதி பிற்பகல் 12 மணிக்கு பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 35.20 அடியாக உயர்ந்தது. 7,590 அடி தண்ணீர் வந்து கொண்டிருக்க 925 கன அடி தண்ணீர் மட்டும் வெளியேற்றப்பட்டது.
* 15ம் தேதி மதியம் 1 மணியளவில் பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.85 அடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு 11,536 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்க 13,224 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
* 15ம் தேதி மதியம் 1 மணியளவில் பேச்சிப்பாறை அணை நீர் மட்டம் 35.50 அடியானது. அணைக்கு 13,005 கன அடி தண்ணீர் வரத்தொடங்கியது. 1,060 கன அடியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
* 15ம் தேதி மதியம் 3 மணியளவில் பேச்சிப்பாறை நீர்மட்டம் 36 அடியானது. அணைக்கு வினாடிக்கு 13,294 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்க வெளியேற்றம் 1,350 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
* 15ம் தேதி மாலை 4 மணிக்கு பேச்சிப்பாறை நீர்மட்டம் 36.20 அடியாக உயர்ந்தது. அணைக்கு 9,667 கன அடி தண்ணீர் வர தொடங்க 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. * 15ம் தேதி மாலை 5 மணியளவில் பெருஞ்சாணிக்கு 11,002 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. 13,224 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.
* 15ம் தேதி இரவு 7 மணிக்கு பேச்சிப்பாறை நீர்மட்டம் 36.70 அடியாக உயர்ந்தது. அணைக்கு 12740 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்க வெளியேற்றம் 5520 கன அடியாக உயர்ந்தது.
* 15ம் தேதி இரவு 7 மணிக்கு பெருஞ்சாணி அணையில் நீர்மட்டம் 73.15 அடியாக இருக்க 12,067 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 12,067 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.
* 15ம் தேதி இரவு 8 மணியளவில் பேச்சிப்பாறை நீர்மட்டம் 37 அடியானது. அணைக்கு 20190 அடியாக நீர்மட்டம் உயர 6030 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
* 15ம் தேதி இரவு 9 மணிக்கு பெருஞ்சாணி உள்வரவு 10,536 ஆனது. வெளியேற்றம் 9136 ஆனது.
* 15ம் தேதி பெருஞ்சாணி இரவு 10 மணிக்கு உள் வரவு 7,700 வெளியேற்றம் 8256
* 15ம் தேதி இரவு 11 மணி பேச்சிப்பாறை உள்வரவு 10,490, வெளியேற்றம் 6,880 கனஅடியாக இருந்தது.
* 16 ம்தேதி காலை 7 மணிக்கு பெருஞ்சாணி 73.90 அடியானது. அணைக்கு 3,952கன அடி தண்ணீர் வந்தது. அணயைில் இருந்து 3,952 கன அடி திறக்கப்பட்டது. பேச்சிப்பாறை 38.40 அடியானது. அணைக்கு 9695 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 9695 கன அடி திறந்து விடப்பட்டது.  இரவு 10 மணிக்கு பேச்சிப்பாறை அணைக்கு நீர் வரத்து 9,695 கன அடியானது. அந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்