SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இபிஎஸ் - ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் மல்லுக்கட்டும் விஷயத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2018-08-17@ 02:33:22

‘‘மனங்கள் இணையவில்லை... அவங்க பிரச்னைகளும் ஓயவில்லை...’’ என்று சொல்லியபடி வந்தார் விக்கியானந்தா. ‘‘ஏதோ இபிஎஸ் - ஓபிஎஸ் மேட்டர் மாதிரி தெரியுதேப்பா... சொல்லு கேட்போம்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தேனி மாவட்டத்துல பல மாதமாய் ஜவ்வ்வாய் இழுத்து வந்த அங்கன்வாடி பணியாளர்கள் நியமனம், ஒரு வழியாக முடிவுக்கு வந்து, கடந்த வாரம் பணி நியமன ஆணை கொடுத்திட்டாங்க...’’‘‘நல்ல விஷயம்தானே... இதுல என்ன பஞ்சாயத்து...’’‘‘இதுலதான் பஞ்சாயத்தே... அதாவது மொத்த காலியிடங்கள் 720. ஆனால், 550 பேருக்கு மட்டும்தான் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாம்... தேனி மாவட்டத்துல பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிபட்டி என மொத்தம் 4 தொகுதிகள் இருக்கு... மத்த தொகுதிகள்ல எந்த பிரச்னையும் இல்லாம நியமனம் முடிஞ்சிருச்சு... ஆனால், கம்பம் தொகுதியில் மட்டும் பிரச்னை நீடிக்குதாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஏனாம்...’’‘‘அதாவது, கம்பம் அதிமுக எம்எல்ஏ ஜக்கையன், தீவிர இபிஎஸ் ஆதரவாளர். இவர் அங்கன்வாடி பணியாளர்களை நியமிக்க ஒரு பட்டியலை கொடுத்திருக்கார்... ஓபிஎஸ் தரப்புல அவரது ஆதரவாளர்கள் ஒரு பட்டியலை கொடுத்திருக்காங்க...

இதனால எந்த பட்டியல் அடிப்படையில் பணி நியமனம் பண்றதுன்னு மாவட்ட நிர்வாகம் மண்டை காயுதாம்... இதனாலதான் 170 பேருக்கு இதுவரை பணி நியமனம் வழங்காமல், மாவட்ட நிர்வாகம் பெண்டிங்ல போட்டிருச்சாம்... மற்ற 3 தொகுதிகள்ல போடி ஓபிஎஸ் தொகுதியாக போயிருச்சு... பெரியகுளம், ஆண்டிபட்டி ‘டிடிவி ஆதரவுல’ காலியாயிருச்சு... இதனால மற்ற தொகுதிகள்ல ஒரு மாதிரி, இரு அணிகள் தரப்பிலும் பங்கீடு ஒத்து போயிருச்சு... கம்பத்துல மட்டும் இழுபறியாய் இருக்கு... கம்பம் மேட்டரால பாதிக்கப்பட்டவங்க, கலெக்டர் அலுவலகத்துல போய் கண்ணீரும், கம்பலையுமாக புலம்புறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஓ... மனங்கள் இணையாமல், பல மனங்கள் மருகித்தவிக்குதுன்னு சொல்லு...’’ என்று தன் பங்குக்கு விரக்தி காட்டிய பீட்டர் மாமா, ‘‘ அதிருக்கட்டும் .. வேலூரில் ரேஷன் அரிசி கடத்தல் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஐடி கார்ட் வழங்காமல் அதிகாரிகள் மெத்தனமாக இருக்காங்களாமே’’ என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

 ‘‘ம்ம்ம்... சொல்றேன் கேளு .. வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்கும் பணியில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் பறக்கும்படை தாசில்தார் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் அடங்கிய குழுவினர் ரோந்து சென்று வருகின்றனர். மாதத்திற்கு 25 டன் ரேஷன் அரிசி வரை பறிமுதல் செய்யப்படுகிறது. ரயில் பெட்டிகளில் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பணியாளர்களிடம், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவதாக டிக்கெட் பரிசோதகர்கள் பொய்யான புகார்கள் தெரிவித்து மிரட்டுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக வேலூர் கலெக்டர், மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகளிடம் புகைப்பட அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கூறினாராம். இதுகுறித்து தகவல் அறிந்த பறக்கும்படை தாசில்தாரான முருகன் பேர் கொண்ட அதிகாரி, ‘ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்றவங்களுக்கு எப்படி போட்டோ ஐடி கார்ட் கொடுக்க முடியும். அதெல்லாம் கொடுக்க முடியாது. அவங்க சொந்த செலவில் தான் டிக்கெட் எடுத்துக்கணும். அதுக்கு நாம் ஒண்ணும் பண்ண முடியாது’ என்று கைவிரிச்சுட்டாராம்.

இதனிடையே போட்டோ ஐடி கார்ட் விவகாரம் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் கேட்பார் என்று எதிர்பார்த்த நிலையில் கூட்டம் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடந்துச்சாம். இதனால் நிம்மதி அடைஞ்ச அதிகாரிங்க இந்த விஷயத்தை அப்படியே கை கழுவிட்டாங்களாம். இதனால் ஒப்பந்த பணியாளர்கள் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பணியில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதனால் ரோந்துப் பணியில் முழுமையாக ஈடுபட முடியலன்னு புலம்புறாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘நெல்லை விவகாரம் ஏதோ இருக்குன்னு சொல்லிட்டு இருந்தியே..’’‘‘ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவையொட்டி நெல்லையில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் சமபந்தி போஜனம் நடப்பது வழக்கம். இதில் அதிமுகவில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்வர். இவ்வாண்டு நெல்லையப்பர் ேகாயில் மட்டுமின்றி சாலைகுமாரசுவாமி கோயிலிலும் சமபந்தி போஜனம் நடந்தது.

ஆனால் அதிமுக நிர்வாகிகள் யாரும் சமபந்தி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. அதிமுகவில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட செயலாளர் ெதாடங்கி பலருக்கும் இந்த ஆண்டு முறையாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்புகள் இல்லையாம். கூட்டுறவு மற்றும் உள்ளாட்சி பொறுப்புகளிலும் அதிமுகவினர் இல்லாத நிலையில், அதிமுகவினர் சமபந்தி நிகழ்ச்சி பக்கம் எட்டி பார்க்கவே இல்லை. போனிலாவது எங்களுக்கு தகவல் சொல்லி இருக்கலாம் என அதிமுகவினர் புலம்பி வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.‘‘கவர்னர் தேநீர் விருந்தை நீதிபதிகள் புறக்கணிச்ச மாதிரி புறக்கணிச்சிருக்காங்கன்னு சொல்லு’’ என்று கூறி சிரித்தார் பீட்டர் மாமா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • japan_animsehan11

  ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

 • wax_giant_pics

  மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

 • church_cathdral11

  நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

 • apolo_50vinkalam1

  நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

 • 18-07-2019

  18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்