SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கேரளாவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும் : பிரதமர் மோடி உறுதி

2018-08-16@ 10:09:28

புதுடெல்லி: கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும் என்றும், வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்ததாகவும் தெரிவித்தார். மீட்பு படையினர் தயாராக இருக்கவும், விரைவில் கேரள மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டெழ வரும்புவதாகவும் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் விடாமல் பெய்யும் பேய் மழைக்கு நேற்று ஒரே நாளில் 28 பேர் பலியாயினர். இதையடுத்து கடந்த ஒரு வாரத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் எல்லா  மாவட்டங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தாண்டவம் ஆடிவரும் பேய் மழையின் தீவிரம் இன்னும் குறையவில்லை.

திருவனந்தபுரம், இடுக்கி, வயநாடு, கண்ணூர் உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று முன்தினம் காலை தொடங்கி கனமழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. நேற்றும் மழை தீவிரமாக பெய்தது. தொடர் மழையால் மொத்தமுள்ள 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. பம்பை, பெரியாறு, வாமனபுரம் உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றன. கனமழையை தொடர்ந்து திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான 14 மாவட்டங்களுக்கும் அடுத்த 3 நாட்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • damagedvinayr_idoles00

    விநாயகர் சதுர்த்தியையடுத்து பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் உடைந்து சிதறி கிடைக்கும் விநாயகர் சிலைகள் !

  • delhiaccid_childead

    டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து : பெண் உட்பட 4 குழந்தைகள் பலி !

  • dogsketc_123amer

    பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

  • presimodhi_madhya123

    மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் : பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்