SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கை அமைச்சர் பேட்டி தமிழக மீனவர் கைது ஏன்?

2018-08-16@ 01:02:57

திருச்சி: எல்லை தாண்டி மீன்பிடிப்பதால்தான் தமிழக மீனவர்கள் கைது செய்யப் படுகிறார்கள் என இலங்கை அமைச்சர் பேட்டியளித்தார்.திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் 1978-80ம் ஆண்டு காலத்தில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தேசிய கொள்கை பரப்பு செயலாளர், இலங்கை அரசில்  தற்போது இணை அமைச்சராக உள்ள சையத்அலி ஜாகிர் மவுலானா, இந்த கல்லூரியில் பிஎஸ்சி படித்தவர். எனவே இவர், முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் ஜாகிர் மவுலானா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்தது வருத்தம் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், கைது  செய்யப்படுகிறார்கள்.

எல்லை தாண்டி மீன் பிடிக்க வருவதால்தான் இந்த பிரச்னை ஏற்படுகிறது. இது இந்திய அரசுக்கும் தெரியும். தமிழக மீனவர்கள் புரிந்து கொண்டு நடந்தால் கைது பிரச்னை இருக்காது. மீனவர்கள் பிரச்னை தீர  இந்தியா-இலங்கை அரசுகள் கடல் எல்லை பகுதிகளில் உள்ள சட்ட திட்டங்களுக்குட்பட்டு பின்பற்ற வேண்டும். அப்போது இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். இலங்கையில் தமிழர்களுக்கும், தமிழ் பெண்களுக்கும் பாதுகாப்பு  இல்லை. விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் இவ்வாறு நடக்காது. பெண்கள் பாதுகாப்பாக இருந்திப்பார்கள் என பேசிய பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் பேசியது பற்றி  துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்