SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

57 ஆண்டுகளுக்கு முன் களவு போன 12ம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பி தந்த இங்கிலாந்து அரசு

2018-08-16@ 00:35:29

லண்டன்: பீகாரின் நாலந்தா அருங்காட்சியகத்தில் இருந்து 1961ம் ஆண்டு களவுப்போய், பல்வேறு கைகள் மாறி இங்கிலாந்து வந்த புத்தர் சிலையை, அந்நாட்டு அரசு நேற்று இந்திய தூதரகத்தில் ஒப்படைத்தது.
பீகாரின் நாலந்தா நகரில், இந்திய அகழ்வாராய்ச்சித் துறையின் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை உள்பட பல சிலைகள் இருந்தன. இவற்றில் சில கடந்த 1961ம் ஆண்டு களவுப்போயின. இது யாரால் எப்படி களவாடப்பட்டது என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

இந்நிலையில், இந்த சிலைகள் பல்வேறு கைகள் மாறி, இங்கிலாந்துக்கு சென்றுள்ளன. அங்கு கடந்த மார்ச் மாதம் பழங்காலப் பொருட்களுக்கான வர்த்தக விழாவில், இந்த சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இதில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை பார்த்த, இந்தியாவைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர், இது நாலந்தா அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல்போன சிலைகளில் ஒன்று என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, அது குறித்து ஸ்காட்லாந்து யார்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.அவர்கள் இது குறித்து விற்பனையாளரிடமும், சிலைக்கு சொந்தக்காரரிடமும் விசாரித்தனர். இதில் அவர்களுக்கும் அப்போதுதான் உண்மை தெரியவந்தது.
இதையடுத்து இந்த சிலையை திருப்பி வழங்கத் தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால், இந்தியாவின் சுதந்திர தினமான நேற்று, புத்தர் சிலையை இங்கிலாந்து அதிகாரிகள், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்