SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்திய மக்களின் டிசைன்

2018-08-16@ 00:16:59

வெள்ளத்தில் கேரளா தத்தளிக்கிறது. தண்ணீர் தேசத்தில் இப்போது எங்கு பார்த்தாலும், வெள்ளம்தான். போதும், போதும் என்று கதறும் அளவுக்கு மழையால் பெரும் சேதத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது அம்மாநிலம். ஒன்றரை லட்சம் மக்கள் வரை நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வளவு சேதத்துக்கு இடையே, கேரள அரசுக்கு உதவும் வகையில் பல்வேறு இடங்களில் இருந்து நிதி குவிந்து கொண்டிருக்கிறது. சொந்த மாநிலத்தில் இருந்து, கேரளாவுக்கு நிதி குவிவது ஒரு பக்கம் இருந்தாலும், அண்டை மாநிலமான தமிழகம், கர்நாடகா,  ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு நிதி குவிவதுதான் பெரிய விஷயமாக உள்ளது. இந்தியா பரந்துபட்டிருந்தாலும், மனதால் ஒன்றுபட்டவர்கள் என்பது நிரூபணமாகி உள்ளது.கேரள வெள்ளத்துக்கு தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முதல், கூலி வேலை பார்க்கும் தொழிலாளர்கள் வரை தங்களால் இயன்ற அளவுக்கு நிதியுதவி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் முக்கிய கட்சியான திமுக ஒரு  கோடி ரூபாயை நிதியுதவி அளித்துள்ளது.

சென்னை வெள்ளத்தின்போது கேரள மக்கள் தங்களால் இயன்ற அளவுக்கு நிவாரணப் பொருட்களையும், நிதியுதவியையும் அளித்து தங்களுடைய மனிதாபிமானத்தை காட்டினார்கள். இப்போது அதற்கு பிரதியுபகாரமாக சென்னை மக்கள் நிதியுதவி அளித்து  கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ் ஆப் குழுவில் இது தொடர்பான அழைப்புகள் ஏராளமாக காணப்படுகிறது.தண்ணீர் பிரச்னையில் நாங்கள் ஆயிரம்தான் அடித்து கொண்டாலும், கஷ்டத்தால் தவிக்கும் சகோதரனை காப்ற்ற எப்படி உடன்பிறப்பு ஓடோடி வருமோ அதுபோன்ற நிலையில், கேரள மக்கள், தமிழக மக்களின் அன்பை  நினைத்து உருகிக் கொண்டிருக்கிறார்கள். இதை அம்மாநில முதல்வர் பினராய் விஜயனே, பேட்டியில் வெளிப்படையாகத் தெரிவித்து தமிழக மக்களுக்கு நன்றி கூறினார்.

கார்கில் போரின்போது இதேபோன்று நாடு முழுவதும் வீரர்களின் குடும்பத்தினருக்காக மக்கள் ஒன்று திரண்டார்கள். ஒவ்வொரு மாநிலத்துக்கு இடையேயும் எவ்வளவோ பிரச்னைகள் இருந்தபோதும், அதை எல்லாம் சிறிதும்  கண்டுக்கொள்ளாமல், போர் முனையில் நிற்கும் வீரனுக்காக ஏராளமானவர்கள் ரத்த தானம், நிதியுதவி என்று அளித்து தங்களுடைய தேசப்பற்றை நிரூபித்தார்கள். இந்த ஒற்றுமையை பார்த்துதான் வெளிநாடுகள் இன்னமும்  மூக்கில் விரலை வைத்து, இந்திய மக்களின் ‘டிசைனை’ புரிந்து கொள்ள முடியவில்ைலயே என்று ஆச்சரியப்படுகின்றன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 2mili_nall

  காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

 • pakisthan_saudi1

  பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது

 • pulwama_kashmirthakuthal11

  காஷ்மீரில் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், ஜம்முவில் 5-வது நாளாக ஊரடங்கு உத்தரவு

 • rafael_porvimanm1

  சர்வதேச விமான கண்காட்சி: பெங்களூருவில் ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் விமான சாகச ஒத்திகை

 • fruitsvegpala1

  லக்னோவில் நடைபெற்ற வருடாந்திர காய்கறி, பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்