SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரையும்.. ஆகஸ்ட் 15ம்..

2018-08-15@ 01:24:35

மதுரை: மதுரையில் 1947 ஆக.15ல் முதல் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட விதம் நமக்குள் புதிய உத்வேகம் நிறைக்கிறது. நாடெங்கும் பிரபலமாக பேசப்பட்ட ‘மதுரை சதிவழக்கு’ 1946 இறுதியில் தொடரப்பட்டு பி.ராமமூர்த்தி, கேடிகே, என் சங்கரய்யா போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்பட 135 பேர் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதற்கென மதுரையில் நீதிபதி ஹசீமைக் கொண்ட சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. வழக்கு எவ்வித விசாரணையும் இன்றி 8 மாதங்கள் இழுபறியாகக் கிடந்தது.

1947 ஆக.14 காலை முதல் நாடு சுதந்திரமடைகிறது என்ற செய்தி எங்கும் பரவியது. மதுரை மக்கள் ஆனந்த முழக்கமிட்டு தெருவெங்கும் சுற்றி வந்தனர். நீதிபதி ஹசீம் நேரில் சிறைச்சாலை சென்று மதுரை சதி வழக்கில் கைதான அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டார். மாலை 7 மணிக்கு சிறையிலிருந்து வெளியே வந்த அனைவரையும் மக்கள் அன்போடு வரவேற்று ஊர்வலமாக திலகர் திடல் அழைத்துச் சென்றனர். நடுநிசி வரை கூட்டம் நடந்தது. இரவு 12மணிக்கு நாடு சுதந்திரம் அடைந்த செய்தியை ஜவகர்லால் நேரு பிரகடனம் செய்தார். இந்தியா சுதந்திரம் அடைந்தது.

மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் சுதந்திரக் கொண்டாட்டம் இப்படி இருக்க, காங்கிரசாரின் கொண்டாட்டத்தில் மேலும் வேகமிருந்தது. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தால் நாடு சுதந்திரத்தை நோக்கி முன்னேறியது. இத்தருணத்தில் ஜின்னா தமது பிரிவினை கோரிக்கையை முன்வைத்து போராடினார். எனவே, பாகிஸ்தான் பிரிவினை உடனேயே, இந்தியா சுதந்திரம் பெற்றது. இதனால் காந்தியடிகள் கண் கலங்கினார். காங்கிரசாருக்கு, குறிப்பாக காந்தி பக்தர்களுக்கு இந்திய சுதந்திரம் இனிப்பும், கசப்பும் கலந்த அனுபவமாகவே மாறியது. மதுரை காங்கிரசார் கொண்டாட்டத்திலும் இந்த அனுபவம் வெளிப்பட்டது. முதல் சுதந்திர தின விழா என்எம்ஆர் சுப்புராமன் தலைமையில் நடந்தது. வைத்தியநாதய்யர், டிகே ரமா, கக்கன் போன்றோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-11-2018

    14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kumbamelawork

    அலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்

  • karwasaathhus

    கணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை

  • statuevisitors

    உலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை

  • californiafire

    கலிபோர்னியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்