பிஇ சேர்க்கையில் தவறு நடக்கவில்லை: அண்ணா பல்கலை துணை வேந்தர் மறுப்பு
2018-08-15@ 01:01:37

சென்னை: அண்ணா பல்கலைக் கழக பிஇ மாணவர் சேர்க்கையில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்துவதில் முறைகேடு நடந்தது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மூன்று அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த முறைகேடு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அண்ணா பல்கலைக் கழக பிஇ, பிடெக் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து ஊடங்களில் செய்தி பரவியதை அடுத்து, அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா விளக்கம் அளிக்க செய்தியாளர்களை நேற்று மாலை சந்தித்தார். அவருடன் உயர்கல்வித்துறை செயலாளர் சுனில்பாலிவால் இருந்தார். அப்போது துணை வேந்தர் சூரப்பா கூறியதாவது:கடந்த 3 நாட்களாக ஊடங்களில் 3விதமான குற்றச்சாட்டுகள் பல்கலைக் கழத்தின் மீது தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக கடந்த ஆண்டு சேர்க்கை, அடுத்தது இரண்டாம் செமஸ்டரில் சில மாணவர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டதாக, 3வது கல்லூரிகளுக்கான கட்டணம் குறித்து குற்றச்சாட்டுகள் வந்துள்ளது. இவை எல்லாம் தவறான தகவல்கள். கடந்த ஆண்டில் நடந்த கவுன்சலிங்கில் மாணவர் சேர்க்கை குறித்து தகவல் உரிமை சட்டத்தில் பெறப்பட்டுள்ள தகவல்கள் தவறானவை. 2வது அல்லது 3வது செமஸ்டரில் தவறாக எந்த மாணவரின் பெயராவது சேர்க்கப்பட்டிருந்தால் அது குறித்து ஆதாரத்துடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கிறோம்.
மேலும் இசிஇ துறையில் 180 பேர் சேர்க்கப்பட்டது குறித்தும் தவறான செய்தி வந்துள்ளது. மாணவர் சேர்க்கையின்போது 20 சதவீத இடங்களை என்ஆர்ஐ, பிற மாநிலத்தவர், வளைகுடா நாடுகளை சேர்ந்தவர்கள், தொழில்கூட்டமைப்பு சேர்்ந்தவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று யுஜிசி விதியில் உள்ளது அதன்படி தான் மாணவர்கள் 20 சதவீதம் சேர்க்கப்பட்டனர். அதற்கான ஆதாரம் உள்ளது. பல்கலைக் கழகம் மீது ஏதாவது குற்றச்சாட்டுகள் வந்தால் உடனடியாக எங்களிடம் கேட்டால் உரிய விளக்கம் அளிக்கப்படும். அனைத்து நடைமுறைகளும் வெளிப்படையாகத் தான் நடந்துள்ளது. இதையடுத்து உயர்கல்வி–்த்துறை செயலாளர் சுனில்பாலிவால் கூறியதாவது: அண்ணா பல்கலைக் கழக தேர்வு முடிந்ததும் முதற்கட்டமாக விடைத்தாள்களை திருத்திய பேராசிரியர்கள் யாரும் தவறு செய்யவில்லை. மறுகூட்டலின் போது நியமிக்கப்பட்டவர்கள் தான் தவறு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக சென்னையில் 76 மாணவர்களின் விடைத்தாள் மறு மதிப்பீடு செய்யப்பட்டது. அதில் தான் கூடுதல் மதிப்பெண்கள் போட்டுள்ளனர். இது தவிர கோவை, திருச்சி மையங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டியுள்ளது. நான் வட மாநிலத்துக்கு பணி மாறுதல்கேட்டு எந்த கோரிக்கையும் அரசிடம் வைக்கவில்லை’’ என்றார்.
மேலும் செய்திகள்
கச்சா எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.3 லட்சம் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அணைகள், மக்களை பாதுகாக்க அவசரகால செயல் திட்டம் தீவிரம் மின்சார மதகுகள், ஆட்டோமெடிக் எச்சரிக்கை கருவி
சென்னையில் கைதியை தப்பவிட்ட போலீசார் 3 பேர் சஸ்பெண்ட்
மக்கள் நலனுக்காக அல்ல தேர்தல் நலனுக்காக கொண்டுவந்த திட்டம்: செந்தில் ஆறுமுகம், சட்டப்பஞ்சாயத்து இயக்கம் ஒருங்கிணைப்பாளர்
ஏழைகளுக்கு நாள்தோறும் 5 ரூபாய் தரும் எடப்பாடி திட்டம் எடுபடுமா?
தேர்வு முடிவை நிறுத்தி வைத்து 30 ஆயிரம் இன்ஜினியரிங் மாணவர்கள் வாழ்வில் விளையாடுவதா? அண்ணா பல்கலைக்கு ராமதாஸ் கண்டனம்