SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

நீர் திறக்காததை கண்டித்து போராட்டம் கதவணைக்கு விவசாயிகள் மாலை

2018-08-15@ 01:01:32

நாகை: நாகை மாவட்டம் பகுதியில் வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்துவிடாத பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள், கதவணைக்கு மாலை அணிவித்து சூடம் ஏற்றி நூதன போராட்டம் நடத்தினர்.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை நடப்பாண்டு 2 முறை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதியும், டெல்டா மாவட்ட விவசாயத்துக்காகவும் மேட்டூர்  அணையிலிருந்து வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடி வரை உபரி நீர் திறக்கப்பட்டது.  இருப்பினும் டெல்டாவின் கடைமடை மாவட்டமான நாகையில் உள்ள திருமருகல், வேதாரண்யம், கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு  இதுநாள் வரை காவிரி தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் எப்போது வந்து சேரும் என்றே தெரியாத நிலையில் சம்பா  சாகுபடியை தொடங்க முடியாமல் விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர்.

கீழ்வேளூர் ஒன்றியம் தேவூரை அடுத்த ராதாமங்கலம், ஆலங்குடி, மகாதானம் உள்ளிட்ட கிராமங்களுக்கு காவிரிநீர் வந்து சேரவில்லை. கீழ்வேளூர் கடுவையாற்றை வந்தடைந்த காவிரி தண்ணீர், ஆந்தகுடி வரை மட்டுமே  வந்துள்ளது. இந்நிலையில் அனைத்து வாய்க்கால்களுக்கும் தண்ணீர் திறந்து விடாத பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து, ராதாமங்கலம் கிராமத்தில் உள்ள உடைந்த கதவணைக்கு விவசாயிகள் நேற்று மாலை அணிவித்து சூடம்  ஏற்றி, சாம்பிராணி போட்டு பூஜை செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்தும், உடனடியாக தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும், தூர்வாரும் பணியில் முறைகேட்டில் ஈடுபட்ட  அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

  • rahulgandhiamedi

    உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

  • usstromattack

    ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

  • pandathirtysix

    36வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான பாண்டா கரடி

  • unassemblybaby

    முதன்முறையாக ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் குழந்தையுடன் பங்கேற்ற நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்