SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

8 வழி விரைவு சாலைக்கு எதிராக சேலம் உள்பட 5 மாவட்டங்களில் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்: 159 ஊர் மக்களின் அதிரடி முடிவால் அதிகாரிகள் அதிர்ச்சி

2018-08-15@ 01:01:16

சேலம்: சேலம் உள்பட 5 மாவட்டங்களில், 8வழி பசுமை விரைவுச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (15ம்தேதி) நடக்கும் கிராம சபைக்கூட்டத்தில் 159 கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்திருப்பது அதிகாரிகள்  மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலத்தில் இருந்து சென்னைக்கு, ₹10ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 8வழி பசுமை விரைவுச்சாலை அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 277 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்படும் இந்த சாலைக்காக  ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. எனவே, இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் கடும்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (15ம்தேதி) தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் கிராமசபைக் கூட்டம் நடக்கிறது. இதில் 8வழி பசுமை சாலையால் பாதிக்கப்படும் 159 கிராம மக்கள், அந்த திட்டத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்திருப்பது அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து 8வழி பசுமை சாலை எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:கிராம சபைக்கூட்டத்தில் 8வழிச்சாலைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளோம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 42, திருவண்ணாமலை மாவட்டத்தில் 74, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1, தர்மபுரி மாவட்டத்தில் 25,  சேலம் மாவட்டத்தில் 17 என்று மொத்தம் 159 கிராமங்கள், 8வழிச்சாலையால் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகும். மேற்கண்ட கிராமங்களில் பாதிக்கப்படும் மக்கள் அனைவரும், இன்று நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்பர்.  இவர்கள் அனைவரும் 8 வழிச்சாலைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருவதற்கு ஆயத்தமாக உள்ளனர். கிராம மக்களுக்கு இருக்கும் உச்சபட்ச அதிகாரத்தை நிறுவுவதற்கான ஒரே இடம், கிராம சபைக்கூட்டம் என்பதால் இந்த  முடிவை எடுத்துள்ளோம். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-07-2019

    19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • japan_animsehan11

    ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 33 பேர் பலி

  • wax_giant_pics

    மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்