SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

நிர்மலா தேவிக்கு ஆக. 28 வரை காவல் நீட்டிப்பு

2018-08-15@ 01:01:13

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கிலும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழக  பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2ம் தேதி மூவரும் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  அப்போது 14ம் தேதி வரை அவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டது. இதனடிப்படையில் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் (எண்:2) நேற்று இரண்டாவது முறையாக மூவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி  திலகேஸ்வரி, மூவருக்கும் ஆகஸ்ட் 28 வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, மூவரும் மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-09-2018

    20-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

  • northkorea_southkore

    வட கொரியாவில் முதன்முறையாக தென் கொரியா அதிபர் சுற்றுப் பயணம்

  • americatoday_flood123

    அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்

  • pakistan_vehicls12345

    பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் பயன்படுத்தப்படும் 70 சொசுகு வாகனங்கள் ஏலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்