தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பனை விதை பந்துகள் நட திட்டம்: திருமாவளவன் தகவல்
2018-08-15@ 01:01:12

சென்னை: நீர்வளத்தை காக்கும் வகையில் பல்லாவரம் பெரிய ஏரியில் திருமாவளவன் பனை விதை பந்து நட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் நீர் வளத்தை காக்கும் வகையில் பல்லாவரம் பெரிய ஏரிக்கரையில் பனை விதை நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பின்னர், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில், ‘ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்த நாளான ஆகஸ்ட் 17ம் தேதி விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு எனது பிறந்தநாளை முன்னிட்டு இயற்கை வளத்தைக் காப்போம் என்ற விழிப்புணர்வுடன் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி முதல் தற்போது வரை மூன்று நாட்களில் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் மொத்தம் 5000 பனை விதைப் பந்துகளை நட்டுள்ளோம்.
தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பனை விதைப் பந்துகளை நடவேண்டும் என்பதே எனது இலக்கு. ஒரு காலத்தில் தமிழகத்தில் முப்பது கோடிக்கும் அதிகமாக இருந்த பனை மரங்கள் இன்று வெறும் மூன்று கோடி மட்டுமே மிச்சம் உள்ளது.நிலத்தடி நீர் ஆவியாகாமல் அவற்றை தக்கவைத்து நீர்வளத்தைக் காப்பதிலும் பனை மரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால் இன்று நிலத்தடி நீர் மட்டம் வற்றிப் போவதற்கு பனை மரங்கள் இல்லாததே காரணம். இதன் மூலம் ஓரளவேனும் அழிந்து வரும் இயற்கை வளத்தைக் காக்க முடியும்’’ என்று கூறினார்.
மேலும் செய்திகள்
பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதி
சொன்னதை செய்தாரா உங்கள் எம்.பி?
புதுச்சேரி ஆளுநரை திரும்ப பெற வேண்டும் : முத்தரசன் வலியுறுத்தல்
கேந்திரிய வித்யாலயா, நவோதயாவில் ஆசிரியர் பணி ஜூலை 7ல் மத்திய அரசு ஆசிரியர் தகுதித்தேர்வு
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா பேரணி, பொதுக்கூட்டத்துக்கு தடை
சர்க்கரை விலை உயர்வு ஆலைகளிடம் நிலுவை தொகையை பெற்றுத்தர நடவடிக்கை வேண்டும் : ராமதாஸ் அறிக்கை
17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு