SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மே 17இயக்க திருமுருகன் காந்தி பெரியார், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தது குற்றமா?: 13 இயக்கங்கள் அரசுக்கு கண்டனம்

2018-08-15@ 01:01:08

சென்னை: பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்ததால் திருமுருகன் காந்தியை கைது செய்த அரசுக்கு கண்டனங்களை தெரிவித்ததோடு, அவரது உயிருக்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று 13  இயக்கங்கள் தெரிவித்துள்ளன.
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து மே 17 இயக்கம், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி  உள்ளிட்ட 13 இயக்கங்கள் ஒன்றிணைந்து பத்திரிகையாளர்  சந்திப்பு நடந்தது.

கூட்டாக அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஐ.நா.வில் ேபசியதற்காக அதிமுக அரசும், பாஜ அரசும் இணைந்து திருமுருகன் காந்தி மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்து  பல்வேறு வகையில் துன்புறுத்தினர். பின்னர் இதை விசாரித்த ைசதாப்பேட்டை மாஜிஸ்திரேட் காவல்துறையை கண்டித்ததோடு, விடுதலை செய்ய உத்தரவிட்டார். ஆனால் போலீசார், திருமுருகன் காந்தி, அம்பேத்கர் சிலைக்கும்,  பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்த போது கூட்டம் கூட்டியதாக கைது செய்ததை பார்க்கும் போது உண்மையில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா என்று கேள்வி எழுகிறது.இவ்வாறு கூறினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்