SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

வணிகர்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடையால் பாதிப்பு 2022ம் ஆண்டு வரை அவகாசம் தரவேண்டும்: விக்கிரமராஜா பேட்டி

2018-08-15@ 01:01:07

சென்னை: பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உத்தரவால் வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் 2022ம் ஆண்டு வரை காலஅவகாசம் தர வேண்டும் என்று விக்கிரமராஜா கூறினார்.  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் அனைத்து பிளாஸ்டிக் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு தி.நகரில் நேற்று நடந்தது. கருத்தரங்கிற்கு, பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை வகித்தார். சென்னை மண்டல தலைவர் ஜோதிலிங்கம் வரவேற்றார். மாவட்ட தலைவர்கள் மோகன், செல்வக்குமார், சாமுவே, மாநில செய்தி தொடர்பாளர்  பாண்டியராஜன், அனைத்து பிளாஸ்டிக் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 கருத்தரங்கின் போது, விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:  தமிழக அரசு 2019 ஜனவரி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அறிவித்துள்ளது. இந்த தடை அமலுக்கு வந்தால் வணிகம் பாதிக்கப்படுவதோடு  வணிகர்களும் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள்.  எனவே அவர்களை அழைத்து ஆலோசனை பெற்று எப்படி மாற்றம் செய்ய வேண்டும் என்பதை அறிந்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். நாடு தழுவிய அளவில் 2022ல் தடை என்ற  வாசகத்தை மத்திய அரசு தந்து கொண்டிருக்கிறார்கள். அதே போல் அவகாசம் கட்டாயம் வேண்டும். இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.  எங்கள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றாதபட்சத்தில் போராடவும்  தயங்க மாட்டோம். இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்