SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநில தேர்தல் ஆணைய ஊழியர்கள் அமைச்சர் மீது கோபத்தில் இருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா

2018-08-15@ 01:00:59

‘‘என்ன விக்கி அதிமுக செயற்குழு கூட்டத்துல என்ன விசேஷம்...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘பொருளாதார ரீதியாக ஆர்.கே. நகர்க்காரர் ஆட்டத்தை ஒடுக்கணும்னு நினைக்கிறாங்க... அவருக்கு பைனான்சியல் சப்போர்ட் பண்றவங்களை முடக்கணும் என்கிற பிளான் ஸ்டார்ட் ஆகிடுச்சு... அதுக்கு அப்புறம்  ஆர்கேநகர்காரரின் ஸ்லீப்பர்செல்களை எல்லாம் முறைகேடு, ஊழல்னு சொல்லி ஏதாவது ஒரு கேஸ்ல சிக்க வைச்சு கட்சியை விட்டு நீக்கணும்... ஆளுங்கட்சியாக இருந்தும் அமைதியை கடைப்பிடிப்பது அரசுக்கும், கட்சிக்கும்  நல்லது இல்ல... அதனால அதிரடி... அதிர்ச்சி வைத்தியம் மூலம் கட்சியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று ஒரு குரூப், தங்கள் தலைமையின் காதில் ஊதி வைச்சிருக்காம்... அதனால அடுத்த மூன்று  மாதங்களுக்கு அதிமுகவுல அதிரடி மாற்றங்களை பார்க்க முடியும்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் என்னாச்சு...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘துப்பாக்கி சூடு வழக்கு, சிலை கடத்தல் வழக்கு, உள்ளாட்சி தேர்தல் வழக்கு, குழந்தைகள் கடத்தல் வழக்கு, ஸ்டெர்லைட் ஆலை வழக்குனு எல்லாமே அரசுக்கு எதிராகவே இருக்காம்... அதுபோல 18 எம்எல்ஏக்கள் வழக்கில்  அந்த நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்பதுதான் அதிமுக செயற்குழுவின் அடுத்த ஆலோசனை... அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று முக்கியமாக ஆலோசனை செய்ய இருக்காங்களாம்...  வரும் நாடாளுமன்ற தேர்தல் வரை இந்த ஆட்சியை இழுத்து செல்வது என்ற முடிவில் ஆளுங்கட்சி தரப்பு  உறுதியாக இருக்காம்... அதற்காக எந்த விலையும் கொடுக்க ரெடியாக இருக்காங்க... மாற்று ஏற்பாடுகளும் தயாராக வைச்சிருக்காங்களாம்... அது எம்எல்ஏக்களின் வழக்கு முடிவை பொறுத்து கடைசி ஆயுதமாக எடுப்பாங்களாம்...’’  என்றார் விக்கியானந்தா.‘‘அது என்ன கடைசி ஆயுதம்...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘அதை இப்ப சொல்ல முடியாது... வேறொரு மேட்டர் சொல்றேன் கேளு... தொழிற்சங்க பணத்தை கையாடல் செய்த சின்னசாமி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறாரு... இப்போ அவருடன் பல்வேறு தொடர்புகளை வைத்துள்ள மற்றொரு முன்னாள் எம்எல்ஏ ‘செம’ நடுக்கத்தில் இருக்காரு... அடுத்த குறி நாம தானோன்னு பயத்தில் இரவில் தூங்கறதே இல்லையாம்...  கதவு தட்டும் சத்தம் கேட்டாலே... ேபாலீசாரோன்னு பயத்துல இருக்காராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘யாரு அப்டி பயந்து சாகறவரு...’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சின்னசாமியின் தீவிர ஆதரவாளராக இருப்பவர் கோவை முன்னாள் எம்எல்ஏவாக இருந்தவர் சவாலை தன் பெயரில் வைத்து இருப்பவர்... சின்னசாமிக்கும் இவருக்கும் இடையே கொடுக்கல், வாங்கல் ரகசியம் பல இருக்காம்...  தொழிற்சங்க பணத்தில் சுருட்டியதில் அவருக்கும் பெரிய அளவில் பங்கு இருக்காம்... அதனால், இவரையும் விசாரித்தால்தான் உண்மை நிலவரம் தெரியும் என விசாரணை அதிகாரிகளுக்கு அதிமுக தரப்பிலிருந்து அழுத்தம்  கொடுத்து இருக்காங்களாம்... இதனால், சவாலை தன் பெயரில் கொண்ட மாஜி எம்எல்ஏவையும் கைது செய்வார்களா... என்று அவரின் அடிபொடிகள் அதிர்ச்சியில் இருக்காங்க...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாநில தேர்தல் ஆணைய ஊழியர்கள் ‘செம’ கடுப்பில் இருக்காங்களாமே... அப்டியா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘டெல்லி தலைவர்களை மீறி மாநிலத்தில் உள்ள பூ கட்சியினர் எது சொன்னாலும் பெரிய அளவுல ரீச் ஆகாது... கட்சி தொண்டர்களை ஊக்கப்படுத்த பயன்படுமே தவிர ஓட்டு வங்கியாக மாறாது... அப்புறம் மத்தியில  அமைச்சராக இருக்கும் ஒருத்தர் தன் தகுதி, அந்தஸ்தை எல்லாம் மறந்து மாநில தேர்தல் ஆணையத்தை பல் இல்லாத விலங்குன்னு சொன்னாராம்... இதை கேட்ட மாநில தேர்தல் ஆணைய ஊழியர்கள் கொந்தளிச்சு போய்  இருக்காங்களாம்... பல் போன விலங்கு என்று எப்படி சொல்லலாம் என்று செம கடுப்பில் இருக்காங்களாம்... இதை அரசு ஊழியர்களும் ரொம்ப சீரியஸாகவே எடுத்து கொண்டு இருக்காங்களாம்... விரைவில் அவரை கண்டித்து போராட்டம் நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து ‘டீப்’ டிஸ்கஷன்ல இருக்காங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மத்திய அமைச்சர் பத்தி சொன்னீங்க... மாநிலத்துலேயும் ஒரு அமைச்சர் அத்துமீறி பேசி இருக்காராமே... அது ெதரியுமா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ஏன் தெரியாம... ஜெயமான அந்த அமைச்சருக்கு மைக் பிடிச்சு பேசறதுன்னா சர்க்கரை பொங்கல் சாப்பிடுற மாதிரி... என்ன பேசறோம்னே தெரியாம பேசுவாரு... ஜனநாயக நாட்டுல யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்தை  சொல்வதற்கு உரிமை உண்டு... ஆனா அப்படி கருத்து சொன்ன நடிகரை எங்க தலைவர்கள் உயிரோடு இருந்தபோது பேசியிருந்தால்... தமிழகத்தில் நடமாடி இருக்க முடியுமா என்று மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி அதிர்ச்சி  அளித்துள்ளார்... இதை அவர்கள் கட்சியின் தொண்டர்களே ரசிக்கவில்லையாம்... எதிர்கட்சியாக இருந்தால் எதை வேண்டுமானாலும் பேசலாம்... ஆளுங்கட்சியாக இருந்து இப்படி பேசினால்... அது கட்சிக்கும் ஆட்சிக்கும்  நெகட்டீவ்வாக அமைந்துவிடும்னு ஆதரவாளர்கள் பேசிக் கொண்டது, ஜெயமானவர் காதிலும் விழுந்திருக்கும்...’’ என்றார் விக்கியானந்தா


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • shadow_111

  பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

 • nigeriaaa_twins1

  இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

 • russia_anumin111

  ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

 • largestpotato

  உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

 • marsgobi_desert1

  செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்