SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கொசு வலைக்குள் சென்று 2 குழந்தைகளுடன் உறங்கிய சிறுத்தை குட்டி

2018-08-15@ 01:00:52

நாசிக்: வீட்டுக்குள புகுந்து கொசு வலைக்குள் 2 குழந்தைகளின் அருகில் படுத்திருந்த சிறுத்தை குட்டியை வன இலாகா அதிகாரிகள் பிடித்து சென்றனர்.மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள இகத்புரி பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதியாகும். இங்குள்ள தமங்காவ் என்ற ஊரை சேர்ந்தவர் மனீஷா பார்டே. இவருக்கு இரண்டு குழந்தைகள். நேற்று காலை 5.30 மணிக்கு  மனீஷா, தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை போது, அவர்களுடன் கொசு வலைக்குள் சிறுத்தை குட்டி ஒன்றும் தூங்கிக்கெண்டிருந்தது. இதை பார்த்த மனீஷா அதிர்ச்சி அடைந்தார். ஆனால் கத்தி கூச்சலிடவில்லை.

மாறாக சாமர்த்தியமாக செயல்பட்டு சிறுத்தை குட்டியை எழுப்பாமல் இரு குழந்தைகளையும் கொசு வலைக்குள் இருந்து வெளியே தூக்கிச் சென்றார். பின்னர்  வனத்துறை க்கு தகவல் தெரிவித்தார். அதிகாரிகள்  விரைந்து வந்து சிறுத்தை குட்டியை பிடித்து சென்றனர். இது 3 மாத குட்டி என்று வன இலாகா அதிகாரி கோரக்‌ஷியாநாத் ஜாதவ் தெரிவித்தார். அதிகாலை மனீஷா  வெளிக் கதவை திறந்த போது இருட்டை பயன்படுத்தி இந்த குட்டி வீட்டுக்குள் புகுந்திருக்கலாம் என்றும், கதகதப்பாக இருக்கும் என்பதால் கொசு வலையில் சென்று படுத்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-09-2018

    26-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

  • rahulgandhiamedi

    உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

  • usstromattack

    ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்