SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சதுரங்க ஆட்டம்

2018-08-15@ 00:51:58

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை 2017ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதிக்குள் வெளியிட்டு நவம்பர் 17ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி  முடிக்கவேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 4ம்தேதி உத்தரவிட்டிருந்தது. ஆனால்,  அந்த உத்தரவுப்படி தேர்தல் நடத்தப்படவில்லை. அதனால், மாநில தேர்தல் ஆணையாளர் மாலிக் பெரோஸ்கோன், செயலாளர் ராஜசேகர் மீது திமுக  தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை கடந்த வாரம் நடந்தபோது, ஐகோர்ட்டில் நேரில் ஆஜரான  தேர்தல் ஆணையர் மற்றும் செயலர், `தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பணிகள் நிறைவடையாத காரணத்தால் தேர்தல் அறிவிப்பை வெளியிட  இயலவில்லை. பணிகள் முடிந்தவுடன் 3 மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்’ என்றனர்.

இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை, நீதிபதிகள் சத்தியநாராயணன், சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு முன் கடந்த இரு தினங்களாக நடந்தது.  அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் திருப்திகரமான பதில் அளிக்கவில்லை. இதனால், நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர். அத்துடன்,  ``ஏற்கனவே போதுமான அளவு காலஅவகாசம் வழங்கப்பட்டு விட்டது. 2016ல் நடத்த வேண்டிய உள்ளாட்சி தேர்தல் 2 ஆண்டு ஆகியும் இன்னும்  நடத்தப்படவில்லை. மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்தியாக இல்லை, இதே நிலை நீடித்தால் 2019ம் ஆண்டு வரைகூட தேர்தல்  நடத்தி முடிக்க மாட்டீர்கள்’ என சாட்டையடி கொடுத்தனர்.

உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில், தமிழக அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் சென்ைன உயர்நீதிமன்றம் தொடர்ந்து சவுக்கடி கொடுத்து  வருகிறது. ஆனாலும், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடாமல் இழுத்தடிப்பது மக்களிடையே கோபத்தை உருவாக்கியுள்ளது.  சாக்கடை அகற்றுதல், தார்ச்சாலை பராமரிப்பு, குடிநீர் விநியோகம், குப்பை அகற்றுதல், தெருவிளக்கு பராமரிப்பு என வீதிகள்தோறும் மக்கள்  நலப்பணிகள் தங்குதடையின்றி நடைபெற வேண்டுமானால், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், மாநில தேர்தல் ஆணையத்தின்  இழுபறி காரணமாக இப்பணிகள் அனைத்திலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதி வழங்க மாநில அரசின்  கஜானாவில் பணம் இல்லை.

அதனால், சில விதிமுறைகளுக்கு உட்பட்டு, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இந்த நிதியை பெறவும் மாநில அரசு நடவடிக்கை  மேற்கொள்ளவில்லை. வீண் பிடிவாதம் காரணமாக, மத்திய அரசிடமிருந்து, தமிழகத்துக்கு ஆண்டுதோறும் வரவேண்டிய நிதி ரூ.3,558 கோடி கிடப்பில்  போடப்பட்டு விட்டது. உள்ளாட்சி தேர்தல் போலவே, கூட்டுறவு தேர்தலும் நடத்தப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. ஒன்று, பணி செய்யவேண்டும்.  இல்லையேல், பணி செய்வோருக்கு வழி விடவேண்டும். இரண்டையும் தடுத்தால், மாநில வளர்ச்சி முடங்கும். இந்த துர்பாக்கிய நிலையை  ஆட்சியாளர்கள் உருவாக்கக்கூடாது. வெற்றி-தோல்வி என்ற அரசியல் சதுரங்க ஆட்டத்தை கைவிட்டு, மக்கள் நலனை மட்டுமே நெஞ்சில் நிலைநிறுத்த  வேண்டும். இதுவே, சிறந்த ஆட்சியாளர்களுக்கு அழகு.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-09-2018

  23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-09-2018

  22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • muharamfest

  நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

 • nasaevanaktrump

  அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

 • florence&trumph

  பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்