SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீதிபதிகளுக்கு இருக்கை ஒதுக்கியது தொடர்பாக தலைமை நீதிபதியுடன் கவர்னரின் செயலாளர் சந்திப்பா?: சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு

2018-08-15@ 00:46:42

சென்னை: நீதிபதிகளுக்கு இடம் ஒதுக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை கவர்னரின்  செயலாளர் திடீரென சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக வி.கே.தஹில்  ரமானிக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியை கவர்னர் மாளிகை ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியில் தமிழக முதல்வர்,  அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள், உயர் நீதிமன்ற ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்களுக்கு  முதல் 4 வரிசையும், அதன் பின்னர் போலீஸ் அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு பின்னால் நீதிபதிகளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வந்த  நீதிபதிகள், தங்களுக்கு பின்னால் இடம் ஒதுக்கியதும், இருக்கைகள் நிரம்பி இருந்ததையும் கண்டு சற்று அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் இருக்கைகள் இடைவெளி சிறியதாக இருந்ததால் நெரிசலில் உள்ளே சென்று அமர்ந்தனர். இந்த சம்பவத்துக்கு நீதிபதிகள் பலர் ஆதங்கம்  தெரிவித்தனர். மேலும் வக்கீல்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கவர்னர் மாளிகை அதிகாரிகளுக்கும், தமிழக  அரசுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கவர்னரின் செயலாளர் ராஜகோபால், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு  நேற்று மாலை திடீரென வந்தார். தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் நீதிபதிகளுக்கு இடம் ஒதுக்கியது தொடர்பாக நீதிபதிகள் அதிருப்தியில் உள்ள  நிலையில் அவரது வருகை நீதிமன்ற வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பின்னர் தலைமை நீதிபதி தஹில் ரமானியை  சந்தித்துவிட்டு வெளியே வந்த கவர்னரின் செயலாளரிடம், எதற்காக வந்தீர்கள் என்று கேட்டபோது, மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், சுதந்திர  தின விழாவில் நடைபெறும் தேனீர் விருந்தில் கலந்துகொள்ள தலைமை நீதிபதிக்கு அழைப்பு விடுக்க வந்ததாகவும் கூறப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

  • crowd_thiruchendhuru11

    சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்