SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காந்தியின் காலடி பதிந்த சேலம்

2018-08-14@ 17:16:58

ஆங்கிலேயர் ஆட்சி நடந்த 1920ம் ஆண்டு காலக்கட்டத்தில், சுதந்திர வேட்கை நம் மக்களிடையே அனலாய் தகித்தது. அகிம்சை என்னும் பொறியை கையில் எடுத்த மகாத்மா, நாடு முழுவதும் சுற்றி வலம் வந்து சுதந்திர தீயை மூட்டினார். இந்தவகையில், தேசப்பிதா மகாத்மா காந்தி, தமிழத்திற்கு 20க்கும் மேற்பட்ட முறை வந்திருக்கிறார். அப்படி, சேலம் நகருக்கும் வந்து பெருமை சேர்த்த வரலாற்று நிகழ்வுகள் நடந்துள்ளது. சேலம் செவ்வாய்ப்பேட்டைக்கு 21.08.1920ல் மகாத்மா காந்தி வந்துள்ளார். இதே ஆண்டில் சேலம் கிச்சிப்பாளையத்திற்கு மகாத்மா காந்தியும், மவுலானா சவுக்கத் அலியும் வந்துள்ளனர்.

காந்தியடிகள், சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த சென்னகிருஷ்ண செட்டியாரின் ஏற்பாட்டில் ஒரு குடிநீர் குழாயை திறந்து வைத்துள்ளார். தர்மகுடிநீர் என அச்சிடப்பட்ட கல்வெட்டு இன்றைக்கும் அந்த பகுதியில் இருக்கிறது. இதற்கு அடுத்த ஆண்டில் 25.09.1921ல் தேதியில் சேலம் வழியே ஈரோட்டிற்கு சென்றுள்ளார். சேலத்தை சேர்ந்த ராஜாஜி, காந்தியின் மனசாட்சி என அழைக்கப்பட்ட காலம் அது. அவர் திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமம் அமைத்து  முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து சுயராஜ்யம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

ராஜாஜி அங்கேயே தங்கியிருந்தபடி சுமார் 10 ஆண்டுகள் அங்கிருந்தபடி கிராமங்களில் சுயவேலைவாய்ப்பினை செய்வது தொடர்பாக இளைஞர்களிடம் உந்துதலை ஏற்படுத்தினார். காரணம் அந்த காலக்கட்டத்தில் மலேசியா, பர்மா, ரங்கூன், சிலோனுக்கு காபி தோட்ட வேலைக்காக கப்பல்களில் மக்கள் சென்றவண்ணம் இருந்ததே இதற்கு காரணமாகும். சேலம் வழியே 21.03.1925ல் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்திற்கு மகாத்மா காந்தி சென்றார்.   அப்போது  காந்தியடிகள், ‘வெளிநாடுகளுக்கு  செல்வதை விட இங்கேயே விவசாயம் செய்யலாம் ’ என்றார். அதை காந்தியின் அறிவுரையாக ஏற்று, ‘உள்ளூர் தொழில், விவசாயம்’ குறித்து  காங்கிரசார் பிரசாரம் செய்தனர்.

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் 1925ம் ஆண்டு திருச்செங்கோடு ஆசிரமத்திற்கு வந்த காந்தி, தனது பெயரை எம்.கே.காந்தி என கையெழுத்திட்டார். அது இன்றைக்கும் அங்கு ஆவணமாக வைக்கப்பட்டுள்ளது. இதே போல் 1934ம் ஆண்டு மீண்டும் திருச்செங்கோடு ஆசிரமத்திற்கு காந்தி வந்த போது தனது பெயரை பாபுஜி என கையெழுத்திட்டார். இங்கு ராட்டை சுற்றி நூல் நூற்றுள்ளார். சேலம் அஸ்தம்பட்டிக்கு 1934ம் ஆண்டில் பிப்ரவரி 13ம் தேதி மகாத்மா காந்தி வந்தார். அஸ்தம்பட்டியை சேர்ந்த தியாகி நடேசன் பண்டாரம் என்பவரின் வீட்டில் (இப்பொழுது அஸ்தம்பட்டி அஞ்சலகம்) சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

அப்போது அவர், ராட்டை சுற்றி கதரின் பெருமையை மக்களிடம் எடுத்துரைத்தார். பின்னாளில் மகாத்மா காந்தி தங்கிய தியாகி நடேசன் பண்டாரத்தின் வீட்டின் மேல்தளம் காந்தி மியூசியமாக மாற்றப்பட்டுள்ளது. தரை தளத்தில், அஸ்தம்பட்டி தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. மாடியில் காந்தி அமர்ந்திருந்த நாற்காலி, அவர் பயன்படுத்திய ராட்டை ஆகியவை உள்ளன. இன்றைக்கும் சேலம் மக்கள், இம்மியூசியத்திற்கு சென்று காந்தியை நினைவு கூர்ந்து வருகின்றனர். இப்படி சேலத்திற்கு பெருமை சேர்த்த மகாத்மா காந்திக்கு, சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சிலை வைக்கப்பட்டுள்ளது. மகாத்மாவின் நினைவலை களை சேலமும் தாங்கி நிற்கிறது என்றால் அது மிகையல்ல.

- க.காந்தி
படங்கள்: சங்கர்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • BiharProtestBrainFever

  பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்

 • YamagataEarthQuake18

  வடமேற்கு ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்..: ரிக்டர் அளவுக்கோலில் 6.8 ஆக பதிவானதால் மக்கள் பீதி!

 • RaptorsShootingToronto

  கனடாவில் லட்சக்கணக்கானோர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் திடீரென நடைபெற்ற துப்பாக்கிச்சூடு..: 4 பேர் காயம்!

 • 19-06-2019

  19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • bji

  முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்