SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விடுதலை திருநாள் வாழ்த்து

2018-08-14@ 17:12:43

கத்தியின்றி, ரத்தமின்றி நடைப்பெற்ற காந்தியடிகளின் அமைதி யுத்தத்தினால் நம் நாட்டுக்கு கிடைத்த ‘விடுதலை' உலக வரலாற்றில் அதிசயம். ஆனால் அமைதி வழி போராட்டம் மட்டும் விடுதலைக்கு காரணமல்ல. வஉசி, திலகர்,  சுப்ரமணிய சிவா, பாரதியார் என வீர போராளிகளின் அதிரடிகளும் காரணம். அதுமட்டுமல்ல வேலுநாச்சியார், குயிலி, மருது பாண்டியர், பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், சுந்தரலிங்கம், ஒண்டி வீரன், செண்பகராமன், நேதாஜி போன்றவர்கள் தொடர்ந்த ஆயுத போராட்டங்களும் இன்னொரு காரணம். உரிமை போராட்டங்கள் எப்போதும் ஒரே குரலில் ஒலிப்பதில்லை.

அதற்கு இந்திய சுதந்திர போராட்டங்கள் மட்டுமல்ல, இன்று தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களும் நல்ல உதாரணங்கள். வேற்றுமையில் ஒற்றுமை இந்திய ஒன்றியத்தின் உயிர்நாடி. ஆயிரம் வேறுபாடுகள் நமக்குள் இருக்கலாம். ஆனால் அந்நியர்கள் நமது இயற்கை ஆதாரங்களை, அவற்றின் மீது நமக்கு இருக்கும் உரிமைகளை கையாளுவதை, கைப்பற்றுவதை ஒருபோதும் ஏற்கப் போவதில்லை. அதற்காக போராட்டங்கள் நடத்த, அதற்கான காரணங்களை வெளியில் சொல்லும் உரிமை, விடுதலையின் அடையாளம். அது நமது நாட்டின் அழிக்க முடியாத குணம். அது நமது பெருமை. அந்த மகிழ்ச்சியுடன் நாட்டின் விடுதலை திருநாளை எல்லோரும் கொண்டாடுவோம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-01-2019

    18-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • rivermoon

    வடகிழக்கு அமெரிக்காவில் நிலவின் மேற்பரப்பை போல உறைந்து காணப்படும் ஆற்றின் நடுப்பகுதி!

  • ParadeREhearsalRepublicDay

    டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையின் கண்கவர் புகைப்படங்கள்

  • alanganalloor_kaalaigal11

    வீரத்துடன் சீறி பாயும் காளைகள்.. மெர்சல் காட்டும் காளையர்கள்... உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா

  • NairobiHotelAttack

    மும்பை பாணியில் கென்யா ஓட்டலில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல்: இதுவரை 21 பேர் உயிரிழப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்