SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்திய எல்லையான லடாக் பகுதியில் 400 மீட்டர் வரை அத்துமீறி ஊடுருவிய சீனப்படைகள்!

2018-08-14@ 14:55:26

லடாக்: சீனப்படைகள் கடந்த மாதத்தில் இந்திய எல்லையான லடாக் பகுதியில் 400 மீட்டர் வரை ஊடுருவி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை முதல்வாரத்தில் கிழக்கு லடாக்கின் டெம்சோக் பகுதியில் 400 மீட்டர் தூரம் வரை சீன வீரர்கள் ஊடுருவி வந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் 5 டென்ட்டுகள் அடித்து தங்கியதாக கூறப்படுகிறது. சீன எல்லைக்கும் பின்வாங்கி செல்லுமாறு இந்திய தரப்பில் வீரர்கள் எச்சரித்தும் அவர்கள் திரும்பி செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு ராணுவ ஆதிகாரிகளுக்கு இடையே இது குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செர்டோங்-நேர்லோங் பகுதியில் இருந்து 3 டென்ட்டுகளை சீனப் படையினர் அகற்றியாகவும் கூறப்படுகிறது. 2 டென்ட்டுகள் அங்கேயே இருப்பதாகவும், அதில் சில சீன வீரர்கள் பொதுமக்களை போல சாதாரண உடையில் தங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கால்நடைகளை மேய்க்கும் நாடோடி பழங்குடியினரைப் போல சீனப்படை வீரர்கள் ஊடுருவி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ராணுவத்தின் தரப்பில் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக்கில் இருந்து அருணாச்சல பிரதேசம் வரை சுமார் 4507 கிலோ மீட்டர் தூர எல்லைப்பகுதி வரை இந்தியா சீனா இடையே எல்லை கட்டுப்பாட்டு கொடு அமைந்துள்ளது. இதில் சீன படை ஊடுருவல் முயற்சி காரணமாக லடாக்கின் டெம்சோக் உள்ளிட்ட 23 பகுதிகளில் பதற்றமான பகுதிகளாக அறியப்படுகின்றன. சீனப்படையினர் 2016-ம் ஆண்டில் 273 ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். கடந்தாண்டு 426 முறையும், நடப்பாண்டில் 170 முறை ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்