SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இமாச்சல பிரதேசத்தில் வரலாறு காணாத கனமழை: 19 பேர் பலி...... நிலச்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

2018-08-14@ 14:50:24

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட  வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 19 பேர் பலியாகி உள்ளனர். வடமாநிலங்களில் தற்போது பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக மலைப்பகுதியான இமாச்சல பிரதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடைவிடாத அடைமழையும் பெய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மழைவெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பான விபத்துக்களில் 19 பேர் பலியாகி உள்ளனர்.

இமாச்சல பிரதேசத்தின் சஜன்பூர் திரா பகுதியில் ஒரே நாளில் 307 மி.மீ மழை பெய்துள்ளது. இதற்கு முன்பு 1901ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளில் 277 மிமீ மழை பெய்ததே அதிகபட்சமாக இருந்தது. இதுதவிர இமாச்சல பிரதேசத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி மட்டும் 73.8 மிமீ மழை பெய்துள்ளது. இது 7 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை ஆகும். இதற்கு முன்பு 2011ல் ஆகஸ்ட் 13-ம் தேதி 75 மிமீ மழை பெய்திருந்தது. லகால், ஸ்பிட்டி மாவட்டங்களை தவிர மற்ற 11 மாவட்டங்களிலும் இயல்பை விட அதிக அளவில் மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-11-2018

    20-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்