SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

'இந்திய அணியை ஒரு போதும் விட்டுக் கொடுக்காதீர்': ரசிகர்களுக்கு கோஹ்லி வேண்டுகோள்

2018-08-14@ 12:29:00

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியை ஒரு போதும் விட்டுக் கொடுக்காதீர் என ரசிகர்களுக்கு கேப்டன் விராட் கோஹ்லி வேண்டுகோள் விடுத்துள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி மோசமாக தோல்வி அடைந்தது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், பேஸ்புக் பக்கத்தில் கேப்டன் விராட் கோஹ்லி உணர்ச்சிப்பூர்வமாக பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது:  சில சமயங்களில் வெற்றி பெறுகிறோம், மற்ற நேரங்களில் கற்றுக் கொள்கிறோம். ஒரு போதும் எங்களை ரசிகர்கள் விட்டுக் கொடுக்காதீர்கள். நாங்களும் ரசிகர்களை விட்டுக் கொடுக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்ததன் மூலம் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறினார். இந்நிலையில் 2-வது டெஸ்டில் மோசமாக விளையாடியதன் காரணமாக அவர் தற்போது தரவரிசையில் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்