ஒலிம்பிக்சில் பதக்கம் வெல்ல உரிய வசதிகள் வேண்டும்: வினீஷ் போகத் ஆதங்கம்
2018-08-14@ 02:02:56

லக்னோ: ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த பயிற்சி முகாமில் பங்கேற்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினீஷ் போகத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மல்யுத்த வீரர்கள் ஒலிம்பிக்சில் பதக்கம் வெல்ல வேண்டுமென நாடே எதிர்பார்க்கிறது. ஆனால், நாங்கள் பயிற்சி செய்வதற்கான வசதிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. சரியான வசதிகள் இல்லாத காரணங்களால் பயிற்சியிலேயே காயம் ஏற்படவும், போட்டி களத்தில் சூழலே மாறுவதால் தடுமாற்றம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.
லக்னோவில் பயிற்சி முகாம் நடந்த இடம் மிகவும் வெப்பச்சூழல் மிகுந்ததாக இருந்தது. உணவு உள்ளிட்ட விஷயங்கள் தரமாக இருந்தாலும், பயிற்சிக்கான களம் உள்ளிட்ட பிற விஷயங்கள் மற்ற நாடுகளுக்கு இணையாக வழங்கப்படுவதில்லை. பல சமயம் மின்தடை ஏற்பட்டது. இதனாலேயே சில சமயங்களில் பயிற்சியை தவிர்த்தேன். நாங்கள் வேறென்ன செய்ய முடியும்? இவ்வாறு அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
புல்வாமா தீவிரவாத தாக்குதல் எதிரொலி: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தானுடன் விளையாட எதிர்ப்பு
பார்சிலோனா அணிக்கு 16வது வெற்றி
கத்தார் ஓபன் டென்னிஸ் ஹாலெப்பை வீழ்த்தினார் எலிஸ் மெர்டன்ஸ்
பிக் பாஷ் டி20 லீக் தொடர் மெல்போர்ன் ரெனகேட்ஸ் சாம்பியன்
தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி இறுதி போட்டியில் இன்று ரயில்வே - ம.பி. மோதல்
சில்லி பாயின்ட்...
சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி
பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை
சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி
ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை
ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!