SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகம் பலவிதம்!

2018-08-13@ 16:39:19


* காட்டுத்தீயில் கருகும் மரம்


அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் காட்டுத்தீ கொளுந்து விட்டு எரிகிறது. கலிபோர்னியா மாகாணத்தின் கிளியர் லேக்ஸ் ஒகாஸ் பகுதியில் காட்டுத் தீ பரவிய வனத்தின் அருகே பட்டுப்போன மரம் தீயில் கருகுகிறது.

* ஹெலிகாப்டர் சாகசத்தால் பறந்து போன மேற்கூரை

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் கியூசோன் நகரில் 117வது தேசிய போலீஸ் சேவை ஆண்டு விழா கோலாகலமாக நடந்தது. இதில், சாகசங்கள் நிகழ்த்திய போலீஸ் ஹெலிகாப்டர் விழா நடந்த மைதானத்தில் தரை இறக்கப்பட்டது. அப்போது, ஹெலிகாப்டர் இறக்கையில் இருந்து வெளிப்பட்ட காற்றால், அதிகாரிகள், ஊழியர்கள் அமரும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மேற்கூரையும், நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப வைத்திருந்த பிரமாண்ட திரையும் பறந்து விழ, அனைவரும் தலைதெறிக்க ஓட, அந்த இடமே பரபரப்பானது.

* டேங்கர் லாரி வெடித்தது


இத்தாலியின் பொலோக்னாவில் நெடுஞ்சாலை ஒன்றில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி திடீரென வெடித்தது. இதில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் தீப்பிடித்ததால், அந்த இடமே குண்டுவெடிப்பு நடந்ததைப் போல புகை மூட்டமாக மாறியது.

* மர்லின் ஆடை ஏலம்

அமெரிக்காவின் பழம்பெரும் நடிகை மர்லின் மன்றோ உலகப் பிரபலம். 1955ம் ஆண்டில் வெளியான திரைப்படத்தில் மர்லின் பயன்படுத்திய இத்தகைய காற்றில் பறக்கும் ஆடை ரொம்பவே வரவேற்பை பெற்றது; அதுவும் இந்த காலக்கட்டம் வரையிலும் கூட. இந்த ஆடையை வடிவமைத்த பில் டிராவில்லா என்பவர் தற்போது மர்லின் ஸ்டைல் ஆடையை ஏலத்திற்கு விடுகிறார். ஏலம் அக்டோபரில் நடக்க உள்ளது.

* ஹாட் பலூனில்

சூரிய அஸ்தமனம் துருக்கியின் பிரபலமான சுற்றுலா நகரம் கேப்படோசியா. இங்கு சுற்றுலா பயணிகள் ஹாட் பலூனில் பறந்தபடி சூரிய அஸ்தமன அழகை கண்டு ரசிக்கின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-01-2019

  19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChillaiKalanKashmir

  கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

 • bombblastcolombia

  கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • chinafiredrone

  மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

 • horse_apain12

  விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்