SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்டுக்கோட்டை அருகே பயங்கரம் பிரான்ஸ் சுற்றுலா பயணி எரித்துக்கொலை: துண்டு துண்டாக உடலை வெட்டி 3 மூட்டையில் கட்டி வாய்க்காலில் வீச்சு

2018-08-13@ 02:20:38

பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள வாட்டாகுடி உக்கடை விஏஓ தனவேல் முன்பு ஆவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் சரணடைந்தார். பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியா வந்த சுற்றுலா பயணியை கொலை செய்து உடலை எரித்து, துண்டு துண்டாக வெட்டி மூட்டைகளில் கட்டி வாய்க்காலில் வீசியதாக அவர் கூறினார். இது குறித்து மதுக்கூர் போலீசில் விஏஓ புகார் செய்தார். இதையடுத்து, போலீசார் திருமுருகனிடம் விசாரித்தபோது அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அவை வருமாறு: பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பீட்டர் (68). தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த ஆவிக்கோட்டையை சேர்ந்தவர் திருமுருகன் (29). பீட்டர் சுற்றுலாவுக்காக  ெசன்னை வந்தபோது  திடீர் சந்திப்பில் இருவரும் நண்பர்களாயினர்.  கடந்த 5 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வந்தனர். இந்தநிலையில், பிரான்சில் இருந்து சுற்றுலாவுக்கு பீட்டர் கடந்த 3ம் தேதி திருச்சிக்கு வந்தார்.

இதையடுத்து கடந்த 5ம் தேதி திருமுருகனை செல்போனில் தொடர்பு கொண்டு உங்களது ஊரை சுற்றி பார்க்க வேண்டுமென பீட்டர் கூறியுள்ளார்.
அதன்பேரில் திருச்சியில் இருந்து மன்னார்குடிக்கு ஒரு காரில் பீட்டரை திருமுருகன் அழைத்து சென்றார். பின்னர் இருவரும் மது அருந்தினர். அதைதொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு ஆவிக்கோட்டையில் உள்ள திருமுருகன் வீட்டுக்கு வந்தனர். பின்னர் வீட்டில் இருவரும் மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் பீட்டரை திருமுருகன் கீழே தள்ளினார். இதில் மயங்கி விழுந்த பீட்டர் சிறிது நேரத்தில் இறந்தார். இதனால் பயந்துபோன திருமுருகன், தனது வீட்டிலேயே பீட்டரின் உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்தார். பின்னர் பீட்டரின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி 3 மூட்டைகளாக கட்டி மதுக்கூர் அருகே உள்ள வாட்டாகுடி உக்கடை வாய்க்காலில் வீசிவிட்டார்.

இந்த தகவல் கிடைத்ததும் எஸ்பி செந்தில்குமார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டார். இதைதொடர்ந்து ஆர்டிஓ (பொ) அழகர்சாமி, தாசில்தார் சாந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் பீட்டர் உடல் பாகங்களின் 3 மூட்டைகளை கைப்பற்றி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ேமலும் போலீசார், திருமுருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்