SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவொற்றியூரில் உள்ள கால்வாய்களில் அடைப்பு குடியிருப்புகளில் மழைநீர் புகும் அபாயம்: பொதுமக்கள் அச்சம்

2018-08-13@ 02:16:07

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடியிருப்புகளில் மழைநீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர் மேற்கு பகுதியில் முல்லை நகர், ஜெய்ஹிந்த் நகர், ஜோதி நகர், சக்திபுரம் மதுரா நகர், சத்திய மூர்த்தி நகர், கார்கில் நகர் போன்ற 50க்கும்  மேற்பட்ட தெருக்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இதில், 70 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில்  மழைநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால், மழை காலத்தில் இந்த பகுதியில் உள்ள தெருக்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கும். அதிகளவில் மழை  பெய்தால் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து விடும். இதனால், குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்துவிடாமல் இருக்க மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும்  என்று மேற்கண்ட பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

அதையேற்று, சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல கோடி செலவில் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டது. இதையடுத்து, மழை  காலங்களில் தெருக்களில் தேங்கும் மழைநீர் இந்த கால்வாய் வழியாக சென்று சாத்தாங்காடு அருகே பக்கிங்காம் கால்வாயில் கலந்து விடும். இந்நிலையில், திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் மழைநீர் கால்வாயை பராமரிப்பதில் அக்கறை செலுத்தாததால், மழைநீர் கால்வாய் கழிவுநீர் கால்வாயாக  மாறிவிட்டது. மேலும், கால்வாயில் செடிகள் கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது, குப்பைகளும், மணலும் அடைத்துக் கொண்டு சேரும், சகதியுமாகிவிட்டது.  இதனால், கால்வாயில் எளிதாக மழைநீர் செல்ல வழியில்லை.

இதுகுறித்து, திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள்  குற்றம்சாட்டுகின்றனர். தற்போது மழை காலம் துவங்கி விட்டதால் அடைப்பு ஏற்பட்டுள்ள இந்த கால்வாயில் மழைநீர் செல்ல வழியில்லாமல் தெருக்களில்  தேங்கி குடியிருப்புகளில் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மழைநீரால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மண்டல அதிகாரிகள் மழைநீர் கால்வாயின்  அடைப்புகளை சரிசெய்ய வேண்டும் என்று  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்