SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவையிலிருந்து பெங்களூரு சென்ற பஸ்சில் எடுத்து சென்ற ரூ80 லட்சம் நகை மாயம்

2018-08-13@ 02:14:31

கோவை: கோவையில் இருந்து பெங்களூருக்கு பஸ்சில் செல்லும்போது, வியாபாரியின் ரூ80 லட்சம் மதிப்பிலா நகை பேக் மாயமானது. கோவை தியாகி குமரன் வீதியை சேர்ந்தவர் அஜித் பட்டேல் (45). தங்க நகை வியாபாரி. இவர் தனது பட்டறையில் தயாரித்த 2800 கிராம் எடையிலான தங்க நகைகளை பெங்களூரில் உள்ள நகை கடைக்கு கடந்த 10ம் தேதி எடுத்து சென்றார். இந்த நகைகளின் மதிப்பு சுமார் ரூ80 லட்சம். காந்திபுரம் ஆம்னி பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏறிய அவர், பெங்களூர் சென்றுள்ளார். பெங்களூர் சென்றவர் பஸ்சில் இருந்து இறங்க முயன்றபோது நகை வைத்திருந்த பேக்கை காணவில்லை.

கோவையில் இருந்து பெங்களூர் நோக்கி பஸ் சென்று கொண்டிருந்தபோது அவர் தூங்கி விட்டதாக தெரிகிறது. பஸ்சில் பயணம் செய்த யாரோ ஒருவர் அவர் தூங்கியதை கண்காணித்து நகை பேக்குடன் பஸ்சில் இருந்து இறங்கி சென்று விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அஜித் பட்டேல் கொடுத்த புகாரின்பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-10-2018

    22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்