SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல்வர் அவமரியாதை செய்கிறார் கவர்னர் கிரண்பேடி குற்றச்சாட்டு

2018-08-13@ 02:13:36

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி அரசில் கவர்னர் கிரண்பேடியின் தலையீடு உள்ளது.  கவர்னர் தன்னிச்சையாக செயல்பட அதிகாரமில்லை, அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். இதற்கு கவர்னருக்கு அதிகாரம் இருப்பது அதிகாரிகளுக்கு தெரியும் கிரண்பேடி பதில் அளித்திருந்தார். இதை மறுக்கும் விதமாக, முதல்வர் நாராயணசாமி நேற்று முன்தினம் கவர்னர் கிரண்பேடிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், 'அமைச்சரவையின் ஆலோசனையின்பேரில்தான் நிர்வாகி (கவர்னர்) செயல்பட வேண்டும். தன்னிச்சையாக செயல்பட அதிகாரம் இல்லை. அமைச்சரவையின் முடிவே இறுதியானது’ என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மேற்கோள் காட்டி பல்வேறு அம்சங்களை தெரிவித்துள்ளார்.

அதிகாரம் குறித்து முதல்வர் அனுப்பிய கடிதத்தை கவர்னர் கிரண்பேடி திருப்பி அனுப்பி விட்டார். இதுகுறித்து கவர்னர், வாட்ஸ்அப்பில் தெரிவித்து இருப்பதாவது: முதல்வர் எனக்கு அனுப்பிய கடிதம் குறித்து பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாக கேள்விபட்டேன். எனக்கு அனுப்பிய கடிதம் அதுவாக இருந்ததால், அதனை திருப்பி அனுப்பி விட்டேன். இது மிகவும் அவமரியாதையாக இருந்தது. இது மாதிரி எனக்கு பல கடிதங்கள் அனுப்புவதை முதல்வர் வழக்கமாக கொண்டிருக்கிறார். இதுபோன்ற கடுமையான கடிதங்கள் பொறுப்பான முதல்வர் அலுவலகத்தின் ெபாறுப்புகளை தரம் தாழ்த்துகிறது. இந்த தகவலை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்