SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாம்பரம் நகராட்சியில் பட்டா வாங்க படாத பாடுபடும் மக்கள் ‘பேக்கேஜ்’ முறையில் பணம் வசூலிக்கும் அதிகாரிகள்

2018-08-13@ 02:13:22

தாம்பரம்: தாம்பரம் நகராட்சி குடியிருப்புகளுக்கு பட்டா பெற்று தருவதாக புரோக்கர்கள், அரசியல் புள்ளிகள், வருவாய்துறை அலுவலர்கள் வசூல் வேட்டையில்  ஈடுபட்டுள்ளனர். பல கோடி ரூபாய் வரை தனி தாசில்தார் பேரம் பேசுவதாக பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். தாம்பரம் நகராட்சி 20.72 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்குள்ள  வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.அதை ஏற்று அரசு கடந்த 2012ல் பட்டா வழங்குவதற்காக நகர நிலவரி திட்ட தனி அலுவலகம் தொடங்கப்பட்டது. தனி தாசில்தார் தலைமையில் இரு நில  அளவையாளர், ஒரு வருவாய் ஆய்வாளர், ஒரு வரைவு அலுவலர் பணிபுரிந்து வருகின்றனர். தனி தாசில்தாருக்கு 1,076 சதுரஅடி நிலத்துக்கு மட்டுமே பட்டா  வழங்க அதிகாரம் உண்டு.

அதன்படி, தாம்பரம் நகரத்தில் பெரும்பாலான மக்கள் தனி தாசில்தாருக்கு விண்ணப்பித்து பட்டா வாங்கினர். பட்டா வழங்குவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட வீட்டை  அளந்து வரைபடம் தயாரிக்க வேண்டும். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஓய்வு பெற்றநில அளவையர்கள், அரசியல் பிரமுகர்கள், புரோக்கர்கள்  ஆகியோர் ‘‘தாங்கள் தனி தாசில்தாரிடம் பேசி பட்டா வாங்கி தருகிறோம்’’ எனக்கூறி ஒவ்வொரு வீதிகளிலும் வீட்டுக்கு ரூ. 10,000 முதல் ரூ. 50,000 வரை  வசூலிக்கின்றனர். சில வீதிகளில் ஒரு வீட்டுக்கு ரூ. 10,000 வீதம் அப்பகுதியிலுள்ள 10 முதல் 20 வீடுகளின் உரிமையாளர்களிடம்  ‘பேக்கேஜ்’ முறையில் லட்சக்கணக்கில் பண  வசூலித்துள்ளனர்.

இதுதவிர நகர நிலவரி திட்ட அலுவலக தாசில்தார் முதல் அலுவலர்கள் சிலர் பட்டா வழங்குவதற்கு நேரடியாக பணம் கேட்பதாகவும்  பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.தற்போது தனி தாசில்தாராக உள்ளவர் மூன்று மாதங்களுக்கு முன் இங்கு பொறுப்பேற்றுள்ளார். இவர் லட்சம் முதல் பல கோடி ரூபாய் வரை பட்டா வழங்க  பேரம் பேசுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்