SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊட்டி மசினக்குடியில் அனுமதியின்றி யானை வழித்தடத்தில் கட்டிய 27 விடுதிகளுக்கு சீல்வைப்பு

2018-08-13@ 02:10:15

ஊட்டி: ஊட்டி அருகே உள்ள மசினகுடி, பொக்காபுரத்தில் யாைன வழித்தடத்தில் கட்டப்பட்ட 27 விடுதிகளுக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நேற்று சீல் வைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள மசினகுடி, பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகள் யானைகள் வழித்தட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் பலர் குடியிருப்புக்கான அனுமதி பெற்று விடுதி நடத்தி வருவதாகவும், இவைகளில் சில கட்டிடங்கள் அனுமதி பெறாமல் கட்டப்பட்டவை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில் யானைகள் வழித்தடங்கள் வரையறை செய்யப்பட்டு கடந்த 2010-ல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனை எதிர்த்து விடுதி உரிமையாளர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ேமல்முறையீடு செய்யப்பட்டன. இதன்பின், கடந்த 9ம் தேதி மாவட்ட நிர்வாகத்திற்கு உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தது.

அதில் யானை வழித்தடத்தில் உள்ள 12 கட்டிடங்களின் உரிமையாளர்கள் 48 மணி நேரத்திற்குள் அனுமதி பெற்றதற்கான ஆவணங்களை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் சமர்பிக்காவிட்டால் அக்கட்டிடங்களுக்கு சீல் வைக்க வேண்டும். மீதமுள்ள 27 விடுதிகளை உடனடியாக 48 மணி நேரத்திற்குள் மூடி சீல் வைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து, விடுதிகளுக்கு சீல் வைப்பது தொடர்பான நோட்டீஸ் கடந்த 10ம் தேதி உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது. நோட்டீஸ் வழங்கி 48 மணி நேரம் முடிந்த நிலையில் நேற்று ஊட்டி ஆர்.டி.ஓ. சுரேஷ் தலைமையில் உள்ளாட்சி, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் அடங்கிய 3 குழுவினர், மசினக்குடி, பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 27 விடுதிகளுக்கு சீல் வைக்கும் பணியை நேற்று காலை 11 மணிக்கு துவங்கினர். 27 விடுதிகளுக்கும் அவைகளில் உள்ள அறைகளுக்கும் இரவு 7.30 மணி வரை சீல் வைக்கும் பணி நடந்தது.

இதுபற்றி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: மசினகுடி, பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் யானை வழித்தடத்தில் அனுமதியின்றி கட்டியுள்ள 27 விடுதிகளுக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சீல் வைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை துவங்கியது. மாலை 6 மணி நிலவரப்படி 80%விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இரவுக்குள் மீதமுள்ள விடுதிகளுக்கும் சீல் வைக்கப்படும். மற்ற 12 கட்டிட உரிமையாளர்களில், 11 பேர் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். ஆவணங்கள் சரி பார்ப்பு பணி நடக்கிறது.  ேமலும் சம்பந்தப்பட்ட இடங்களில் அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளது. அதற்கு ஓரிரு நாட்கள் ஆகும். ஒரு கட்டிட உரிமையாளர் மட்டும் 48 மணி நேர கால அவகாசம் முடிந்தும் ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2018

    14-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • asiya_mukesh11

    ஆசியாவை ஆட்டம் காண வைத்த முகேஷ் அம்பானி மகள் திருமணம்

  • kali_ramnatha11

    மியான்மரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : ரீ காளி கோவிலுக்கு சென்று வழிபட்டார்

  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்