SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 மாவட்டங்களில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு: விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம்

2018-08-13@ 02:08:36

திருப்பூர்: விவசாய சங்கங்களின் செயல் வீரர்கள் கூட்டம் காங்கயத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் ராஜாமணி தலைமை வகித்தார்.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மே 6ம் தேதி நடந்த கோரிக்கை மாநாட்டிற்கு பின் தமிழக அரசு இரு முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்து திட்டப்பணிக்கு தீர்வு கிடைக்கும் வரை நிறுத்தி வைப்பது என ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையை மீறி போலீஸ், வருவாய்துறை அதிகாரிகள் மூலம் விவசாயிகளை மிரட்டி நிலங்களில் உயர்மின்அழுத்த கோபுரம் அமைக்க அளவீடு பணி நடந்து வருவது கண்டிக்கத்தக்கது.

விவசாயிகள் அனுமதியின்றி மின்கோபுரங்கள் அமைக்ககூடாது. உயர் மின் அழுத்த கோபுரத்தால் சிறு, குறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். மாவட்ட வாரியாக விவசாயிகளிடம் கருத்து கேட்டு அதன்படி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், 13 மாவட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்