SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரதரத்னா விருது அளிக்க 15 ஆண்டாக கோருகிறோம்: முஸ்லிம் லீக் தகவல்

2018-08-13@ 02:06:13

ஆம்பூர்: திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கடந்த 15 ஆண்டாக கோரிக்கை விடுத்து வருகிறோம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் கூறினார். வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் நேற்று அளித்த பேட்டி: 5 முறை தமிழக முதல்வராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதியின் மறைவு தமிழகத்திற்கு ஒரு பேரிழப்பு. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக நான் எம்பியாக இருந்தபோதே திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரி வந்தேன். 15 ஆண்டாக கூறிவரும் இந்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்து அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்.

தேசிய அளவில் மூன்றாவது அணி சாத்தியமில்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திமுகவுடனான கூட்டணியில் இருந்து வருகிறது. தொடர்ந்து இருப்போம். கருணாநிதி காட்டி சென்ற தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் கொள்கை உறுதியுடன் செயல்பட நாங்கள் அவருக்கு ஒத்துழைப்போம்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். வல்லரசு நாடுகளில் ஒரே நாளில் அனைத்து தேர்தல்களும் நடத்தப்படும் நிலையில் இந்தியாவிலும் அனைத்து தேர்தலும் ஒரே நாளில் நடத்தலாம். இதனால், நேரம், பொருள் விரயம் தவிர்க்கப்படுவது மட்டுமன்றி முறைகேடுகள் நீக்க வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்