SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விடைத்தாள் மறுமதிப்பீட்டை தொடர்ந்து அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கையில் பல கோடி முறைகேடு: தீவிர விசாரணை நடத்த ஆசிரியர்கள் கோரிக்கை

2018-08-13@ 01:48:06

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது மாணவர் சேர்க்கையிலும் பல கோடி ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு, தகுதி இல்லாத மாணவர்களுக்கு இடம் அளித்திருப்பதாக திடுக்கிடும் புகாரை பல்லைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் ரூ600 கோடி முறைகேடு நடந்தது தொடர்பாக ஜூலை 31ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பாக முன்னாள் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் உமா, மாணவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு முறைகேடு புகார் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையை பொறுத்தவரை அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு நடத்தி இடம் ஒதுக்கீடு செய்கிறது. இதிலும், பெரும் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆசிரியர்கள் கூறியவதாவது:
இந்த ஆண்டு முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வுக்குபின் பொதுப்பிரிவு இன்ஜினியரிங் கலந்தாய்வு தொடங்கியது.

2017ம் ஆண்டு, இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு பின், மருத்துவக்கலந்தாய்வு நடந்தது. அதில் இன்ஜினியரிங் கலந்தாய்வில் சீட் தேர்வு செய்த மாணவர்களில் 1,000 பேர் எம்பிபிஎஸ் படிக்க சென்றுவிட்டனர். அதனால் அண்ணா பல்கலைக்கழகம், முக்கிய அரசுக்கல்லூரிகளில் காலியிடங்கள் புதிதாக உருவானது. அந்த இடங்களில் அண்ணா பல்கலைக் கழக விதிமுறைப்படி மீண்டும் அறிவிப்பாணை வெளியிட்டுதான் மாணவர்களை தகுதியின் அடிப்படையில் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் மிகவும் முக்கியமான அந்தக் கல்லூரிகளில் சீட்டுகளை மறைத்துவிட்டு சிபாரிசு, பணம் ஆகியவற்றின் மூலம் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, 100 மாணவர்களை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரடியாக சேர்த்துள்ளனர். இதற்காக ஒவ்வொரு மாணவரிடமும் ரூ20 லட்சம் வரை லஞ்சமாக பெற்றுள்ளாதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இன்ஜினியிரிங் கலந்தாய்வில் பங்கேற்று அண்ணா பல்கலைக்கழகத்தை தேர்வு செய்த மாணவர்கள் பட்டியலைவிட இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் படிப்பவர்களின் பட்டியலில் உள்ள மாணவர்களின் அதிகமாக உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர்கள் பிரபல தனியார் கல்லூரிகளுக்கு கூடுதல் பணம் பெற்றுக்கொண்டு நிர்வாக ஒதுக்கீடு இடங்களை நிரப்பும் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் குறிப்பிட்ட கல்லூரி இடங்களுக்கான தேவையை பொறுத்து கட்டணத்தை கூட்டி முறைகேடாக பல லட்ச ரூபாய் சம்பாதித்துள்ளனர். அதே போல் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில் நிறுவனங்களுடன் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில், தொழிற்சாலை பிரிவின்கீழ் ஒவ்வொரு பாடப்பிரிவில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர் இடங்களை தொழில் நிறுவனங்கள் நிரப்பிக்கொள்ளலாம். ஆனால் இந்த இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களின் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த கோட்டா அடிப்படையில் குறிப்பிட்ட மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்திலேயே பி.எச்டி வரை படிக்கிறார்கள். இந்த முறைகேடு தொடர்பாக காவல்துறையில் புகார் தெரிவிக்க உள்ளோம். இவ்வாறு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பி.இ சேர்க்கையில் வெளிப்படை இல்லை
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பி.இ., பி.டெக்., படிப்புக்கான கவுன்சலிங்கில் வெளிப்படை தன்மை இல்லாததால், முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக பெற்றோர் குமுறுகின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வது முதல் அனைத்து நடவடிக்கையும் ஆன்லைனில் தான் நடக்கும் என்று அறிவித்தனர். இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கல்வியாளர்கள், பெற்றோர் எச்சரித்தும் அதை அண்ணா பல்கலை பொருட்படுத்தவில்லை. கவுன்சலிங் தொடங்கும் காலத்தில் எந்த கல்லூரியில் எந்த பாடப்பிரிவு புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது, எந்த பாடப்பிரிவு நீக்கப்பட்டது என்ற விவரங்களை கல்லூரிகளோ அல்லது அண்ணா பல்கலைக்கழகமோ தெளிவாக மாணவர்களுக்கு விளக்கவில்லை. மாறாக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஒரு கையேடு கொடுக்கின்றனர். அதில் கல்லூரிகள் பற்றிய முழுமையான விளக்கம் இல்லை. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டண விவரங்களுக்கும், சேர்க்கையின்போது பெறப்படும் கட்டணத்துக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. மூடப்பட்ட கல்லூரிகள் பட்டியலையும் அண்ணா பல்கலை வெளியிடவில்லை. இதனால் மாணவர்களுக்கு கல்லூரிகளை தேர்வு செய்வதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்