SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

அணைகள், ஆற்றோரங்களில் செல்பி எடுக்க தடை மழை, வெள்ளம் குறித்து பீதியை கிளப்பினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

2018-08-13@ 01:44:07

சென்னை: மழை, வெள்ளம் குறித்து பொதுமக்களிடடையே பீதியை கிளப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாடு மையத்தில் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று  நடந்தது. கூட்டத்துக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் உதயகுமார் அளித்த பேட்டி: கேரளா, கர்நாடகா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீரின் அளவு வினாடிக்கு 1 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.

இந்த தண்ணீர் இன்னும் இரு தினங்களில் மேட்டூர் அணைக்கு வந்து சேரும். இதனால் காவிரி கரையோர மாவட்டமான தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர் அதிகளவு வெளியேற்றப்படும் போது அணைகளில் மீன் பிடித்தல் மற்றும் பொழுது போக்கு நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபடக்கூடாது. குழந்தைகளை ஆற்றங்கரையில் குளிக்க வைக்கவோ, விளையாடவோ அனுமதிக்க வேண்டாம். மழை, வெள்ளம் மற்றும் வெளியேற்றப்படும் நீர் தொடர்பாக பொதுமக்கள் எந்த பீதியும் அடைய வேண்டாம். தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி  பொதுமக்களிடம் பீதி ஏற்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நீர் வெளியேற்றப்படும்போது அணைகள், ஆறுகள், ஏரிகள் முன்பாக நின்று கொண்டு பொதுமக்கள் யாரும் செல்போன் மூலம் செல்பி எடுத்து கொள்ள வேண்டாம்.

அவ்வாறு எடுத்தால் போலீசார் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடகாவில் செல்பி எடுத்த 2 பேர் நீரில் சிக்கி இறந்துள்ளனர். வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக பரவும் வதந்திகளை யாரும் நம்ப கூடாது. அரசு அறிவிக்கும் அறிவிப்பை மட்டுமே நம்ப வேண்டும். அவ்வப்போது அரசு சார்பில் பத்திரிகை, தொலைக்காட்சி, வாயிலாக பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிடப்படும். தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள முகாமில் இதுவரை 359 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டங்களில் உள்ள முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் உதயகுமார் கூறினார்.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-03-2019

  19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mylai_kabal1

  பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

 • parade_eye1

  புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

 • newattack

  நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

 • siva_muthu12

  காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்