SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடர் கைது நடவடிக்கை எதிரொலி இணை ஆணையர்கள் பணியிட மாற்றம் நிறுத்தம் : அறநிலையத்துறை தலைமை நடவடிக்கை

2018-08-13@ 01:41:24

சென்னை: அறநிலையத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதால் இணை ஆணையர்கள் பணியிட மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணிபுரியும் செயல் அலுவலர், உதவி ஆணையர், இணை ஆணையர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், விருப்பத்தின் பேரிலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், அதிகாரிகள் பலர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், பல்வேறு ேகாயில்களில் பணிபுரியும் இணை ஆணையர், கோயில் செயல் அலுவலர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தது. இதையடுத்து கடந்த ஜூலை மாதத்தில் 84 செயல் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து கமிஷனர் ஜெயா உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் இணை ஆணையர்களை பணியிட மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து கமிஷனர் அலுவலகம் சார்பில் இணை ஆணையர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அவர்களை பணியிட மாற்றம் செய்யும் வகையில், அந்த பட்டியலுக்கு தமிழக அரசின் ஒப்புதல் கேட்டு அனுப்பி வைத்தது. இந்த நிலையில், சிலை கடத்தல், சிலை மற்றும் தேர் செய்ததில் மோசடி உள்ளிட்ட பல்வேறு விவகாரம் தொடர்பாக அறநிலையித்துறை கூடுதல் ஆணையர், இணை ஆணையர்கள் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அடுத்து எந்த அதிகாரிகள் மீது புகார் வருமோ என்ற பயத்திலும் அறநிலையத்துறை கலக்கத்தில் உள்ளது. இந்த நிலையில், தற்போது இணை ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்தால் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில், இணை ஆணையர்கள் பணியிட மாற்றத்தை அறநிலையத்துறை நிறுத்தி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்