SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

கருணாநிதி நினைவிடத்தில் நடிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி: அலைமோதிய மக்கள் கூட்டம்

2018-08-13@ 01:37:23

சென்னை: கருணாநிதி நினைவிடத்தில் நடிகர், நடிகைகள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் நேற்றும் அஞ்சலி செலுத்தினர். விடுமுறை நாள் என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதியது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடல், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.  கடந்த 8ம் தேதி நடந்த இறுதி ஊர்வலத்தின் போது லட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து அன்று இரவில் இருந்தே திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து, நடிகை திரிஷா, நடிகர் விஜயகுமார், இயக்குநர் ஹரி, நடிகர் கார்த்திக், வணிக சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன், நடிகர் மயில்சாமி, ஓய்வு பெற்ற டிஜிபி அலெக்ஸாண்டர், நடிகை ஜெயசித்ரா, நடிகர் தியாகராஜன், பிரசாந்த், கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பிலும், திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் நேப்பியர் பாலத்தில் இருந்து ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர். கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு திமுக சார்பில் உணவு வழங்கப்பட்டது.  நேற்று விடுமுறை நாள் என்பதால் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த காலை முதலே  தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. கருணாநிதியின் நினைவிடத்தில் நேற்றும் திமுகவின் சின்னமான உதயசூரியன் வடிவில் கருப்பு, சிகப்பு வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. நினைவிடத்தை சுற்றிலும் துருப்பிடிக்காத இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி நினை விடத்தில் அவருடைய மகன் மு.க.முத்து காலை 10.30 மணியளவில் வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். சிறிது நேரம் கருணாநிதியின் உருவப்படத்தை பார்த்தவாறு கண் கலங்கியப்படி கதறி அழுதார்.

பின்னர் கனிமொழி எம்.பி. தலைமையில் டிசம்பர் 3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தீபக் மற்றும் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் ஆசிரியர்கள் பேரணியாக வந்து அஞ்சலி செலுத்தினர். சவுகார்பேட்டையை சேர்ந்த பள்ளி மாணவிகள் ரோஜா பூவை கருணாநிதி நினைவிடத்தில் வைத்து அஞ்சலி செலுத்தினர்.அதைத் தொடர்ந்து சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் ராதிகா சரத்குமார் தலைமையில் நிர்வாகிகள் கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், நக்கீரன் கோபால், கவிஞர் பா.விஜய், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த மூத்த நிர்வாகி தங்க தமிழ்ச்செல்வன்,

நடிகை லதா, நடிகர் தியாகு, எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா விஜயக்குமார் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் கூறுகையில்: கருணாநிதியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அவர் மறைவு வருத்தம் அளிக்கிறது. திராவிட பாரம்பரியத்தில் பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடம் காமராஜர் சாலையில் அமைந்துள்ளது. இந்த சாலையில் பெரியார் சிலை, காமராஜருக்கு சிலை வைத்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். மக்களும் அதை வரவேற்பார்கள். நடிகை ராதிகா சரத்குமார் கூறுகையில்: மனவருத்தத்துடன் இங்கு நிற்கிறேன். அவருடைய சிரிப்பு, பேச்சு, வேகம், விவேகம் அனைத்தும் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறது. வாழ்க தமிழ், வாழ்க கலைஞர் அவருடைய நினைவும், உழைப்பும் திமுக தொண்டர்களுக்கு ஊக்கமாக இருக்கும். அந்த பேரும் புகழும் என்றும் களங்கம் இல்லாமல் இருக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-03-2019

  19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mylai_kabal1

  பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

 • parade_eye1

  புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

 • newattack

  நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

 • siva_muthu12

  காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்