SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுதந்திர தினத்தன்று தமிழகம் முழுவதும் 449 கோயில்களில் பொது விருந்து : முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு

2018-08-13@ 01:34:59

சென்னை: தமிழகம் முழுவதும் 449 கோயில்களில் சுதந்திர தினத்தில் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடத்தப்பட உள்ளது. இதில், முதல்வர் பங்கேற்க உள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 15ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள 449 கோயில்களில், அனைத்து சமுதாய மக்களும் பங்குபெறும் வகையில் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடைபெற உள்ளது. இவ்விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு திருக்கோயில்களில் காணிக்கையாக பெறப்பட்டு உபரியாக உள்ள பருத்தி வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட உள்ளன. மாவட்டங்களில் உள்ள திருக்கோயில்களில் மாவட்ட ஆட்சியர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நடைபெறும் நிகழ்வில் சபாநாயகர் ப.தனபால், கே.கே.நகர் சக்தி விநாயகர் கோயிலில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் திண்டுக்கல் சீனிவாசன், அடையாறு அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் அமைச்சர் செங்கோட்டையன், மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோயிலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ராயப்பேட்டை சித்தி புத்தி விநாயகர் ேகாயிலில் அமைச்சர் ஜெயக்குமார், மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோயிலில் அமைச்சர் எம்.சி.சம்பத் உட்பட சென்னையில் 35 கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்