SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடிமராமத்து திட்டத்தின் கீழ் 3வது கட்டமாக ரூ500 கோடியில் 2,500 ஏரிகளை புனரமைக்க முடிவு : வடகிழக்கு பருவத்துக்கு முன் முடிக்க திட்டம்

2018-08-13@ 01:31:06

சென்னை: குடிமராமத்து திட்டத்தின் கீழ் மூன்றாவது கட்டமாக ரூ500 கோடியில் 2,500 ஏரிகள் புனரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகள் புனரமைப்பு பணி மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக ரூ100 கோடி செலவில் 1,513 ஏரிகள் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக ரூ328 கோடி செலவில் 1,511 ஏரிகளை புனரமைக்கவும், இதற்கான புனரமைப்பு பணிகளை ஆயக்கட்டுதாரர்கள், பாசன விவசாயிகள் சங்கம், விவசாய அமைப்புகள் மேற்கொள்ளவும் தமிழக அரசு முடிவு செய்தது. இந்த திட்ட பணிகளை கண்காணிக்க 7 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2 வட்டத்துக்க ஒரு ஐஏஎஸ் அதிகாரி வீதம் 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், தற்போது, ஏரிகள் புனரமைப்பு நடந்து வரும் பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது வரை தமிழகம் முழுவதும் 1,221 ஏரிகளின் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

மற்ற 290 இடங்களில் விரைவில் ஏரிகள் பணிகளை தொடங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில், மூன்றாவது கட்டமாக குடிமராமத்து திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடு செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி ரூ500 கோடி செலவில் 2,500 ஏரிகள் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஏரிகளில் 5 ஆண்டுகள் வரை மீண்டும் எந்த விதமான புனரமைப்பு பணிக்காக வேலையை செய்யாமல் இருக்கும் வகையில் அனைத்து பணிகளுக்கும் சேர்த்து திட்ட அறிக்கை தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பேரில், அதிகாரிகள் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் வேகம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘குடிமராமத்து திட்டத்தின் கீழ் மூன்றாவது கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ள பணிகளுக்கு தற்போது திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், ஏரிகளை தூர்வாருவது, மதகுகளை புதுப்பிப்பது, கலங்கல்களை சீரமைத்தல், வாய்க்கால்களை புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் சேர்த்து மேற்கொள்ளப்படும் வகையில் இந்த அறிக்கை தயாராகிறது. நபார்டு வங்கியின் நிதியுதவியின் கீழ் இப்பணி நடக்கிறது. விரைவில் இந்த திட்ட பணிகளுக்கான அறிக்கை தமிழக அரசு சமர்பிக்கப்படவுள்ளது. தமிழக அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் நபார்டு வங்கியிடம் நிதி கேட்டு ேகாரிக்கை வைக்கப்படுகிறது. அதன்பிறகு இந்த திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்