SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

வட சென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி துப்பாக்கி முனையில் சுற்றிவளைப்பு: 21 கொலை உட்பட 50 வழக்கில் தொடர்புடையவன்

2018-08-13@ 01:30:40

சென்னை: வட சென்னையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்.  சென்னை பிராட்வே காக்கா தோப்பு பகுதியில் உள்ள பிஆர்என். கார்டன் வள்ளுவர் நகரை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் பாலாஜி (36). பிராட்வே  பகுதியில் உள்ள 9ம் வகுப்பு வரை படித்துள்ளான். பாலாஜிக்கு சிறு வயதில் இருந்தே ரவுடியாக வேண்டும் என்ற ஆசையில் பல சண்டைகளில் ஈடுபட்டு காவல்  நிலையம் சென்று பிணையில் வெளியே வருவான். பாலாஜியின் சித்தப்பா துரை வியாசர்பாடியில் ரவுடியாக வலம் வந்தவர். இதனால் பாலாஜி படிப்படியாக  காக்கா தோப்பு பகுதியில் ரவுடியாக வலம் வந்த யுவராஜ் மற்றும் இன்பராஜ்  ஆகியோருடன் சேர்ந்து சுற்றி வந்தான். பிறகு முதன் முதலில் மூலக்கொத்தளம்  ரவுடி தாமுவின் அண்ணன் புஷ்பா என்பவரை யுவராஜ், இன்பராஜ் உடன் சேர்ந்து பாலாஜி வெட்டி கொலை செய்தான். இது தான் பாலாஜிக்கு முதல் கொலை.

ஒரு கட்டத்தில் யார் பெரியவன் என்ற போட்டியில், தன்னை வளர்த்து விட்ட ரவுடி யுவராஜை தனது நண்பர்கள் இளையமணி, அப்பளம் பிரகாஷ் ஆகியோருடன்  சேர்ந்து பாலாஜி வெட்டிக்கொலை செய்தான். இந்த வழக்கில் பாலாஜியை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு பாலாஜி தனது பெயருடன் காக்கா தோப்பு  என்ற பெயரை சேர்ந்து கொண்டு பெரிய ரவுடியாக வலம் வந்தான். அப்போது, சிறையில் இருக்கும் போது மற்றொரு ரவுடி குற நடராஜனுடன் பாலாஜிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் மணல் மேடு சங்கருடன் பாலாஜிக்கு பழக்கம்  ஏற்பட்டு டெல்டா மாவட்டங்களில் மணல் மேடு சங்கரின் எதிரிகளான ஆத்தூர் கண்ணையா மற்றும் அவரது மச்சான் ஆதியையும் வெடிகுண்டு வீசி கொலை  செய்தான். இந்த கொலை வழக்கில் பாலாஜி தப்பி விட்டான். கடந்த 2007ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி மணல்மேடு சங்கரை போலீசார் என்கவுன்டர் செய்தனர்.

அதன்பிறகு, யானைகவுனி பகுதியை சேர்ந்த தலித் பாலுவிடம் ஏற்பட்ட தகராறில் கடந்த 2009ம் ஆண்டு தலித் பாலுவின் தம்பியான சதீஷ்யை கிரிக்கெட்  மைதானத்தில் தனது கூட்டாளிகள் பொக்கை ரவி மற்றும் தாடி சுரேஷ் ஆகியோருடன் சேர்ந்து பாலாஜி வெட்டி கொலை ெசய்தான். இதுபோல் பணத்திற்காக  தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து  2011ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி பாலாஜி பில்லா சுரேஷ் வீட்டின் மேற்கூரையை உடைத்து வீட்டின் உள்ளே இறங்கி பில்லா  சுரேஷை அவரது மனைவி கண் எதிரே தலையை வெட்டி எடுத்தான். அடுத்த அரை மணி நேரத்தில் ரவுடி விஜி (எ) விஜயகுமாரையும் வெட்டி கொலை  செய்தான்.  

படிப்படியாக வளர்ந்து வந்த பாலாஜி செம்மரக்கடத்தல் தொழிலும் செய்து வந்தான். இதனால் மாதவரத்தில் செம்மரம் கடத்தல் செய்து வந்த மனோஜ் என்பவரிடம்  பழக்கம் ஏற்பட்டது. அதன் மூலம் பாலாஜி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்தான். அதன் மூலம் பல இளம்பெண்கள் மற்றும் நடிகைளுடன் உல்லாச  வாழ்க்கையை நடத்தி வந்தான்.
கடந்த 2010ம் ஆண்டு ஆந்திராவில் உள்ள விஜயவாடா பகுதியில் கள்ள நோட்டு மாற்றி அந்த பகுதி போலீசாரால் பாலாஜி கைது செய்யப்பட்டான். இதுபோல்  காக்கா தோப்பு பாலாஜி மீது தமிழகம் முழுவதும் 21 கொலை வழக்குகள் உள்ளது.

இதுதவிர ஆள்கடத்தல், அடிதடி, பணம் கேட்டு மிரட்டல் என 30க்கும்  மேற்பட்ட வழக்குகள்  பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.இந்நிலையில், காக்கா தோப்பு பாலாஜி குறித்து மத்திய குற்றப்பிரிவு ரவுடிகள் ஒழிப்பு பிரிவு கொடுத்த தகவலின் படி முத்தையால் பேட்டை போலீசார் ேநற்று  இரவு ராயபுரம் பழைய பாலம் அருகே துப்பாக்கி முனையில் காக்கா தோப்பு பாலாஜியை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவனிடம் இருந்து 2 பட்டாக்கத்திகள்  மற்றும் தப்பிக்க பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

காக்கா தோப்பு பாலாஜி மீது உள்ள வழக்குகள்
* பெரியமேடு காவல் நிலையத்தில் - 1
* புளியந்தோப்பு காவல் நிலையத்ல்- 2
* பழைய வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில்- 1
* முத்தியால் பேட்டை காவல் நிலையத்தில் கொலை உட்பட 22 வழக்குகள்
* யானைக்கவுனி காவல் நிலையத்தில்- 4
* ஏழுகிணறு காவல் நிலையத்தில்- 1
* மயிலாப்பூர் காவல் நிலையத்தில்- 2
* திருவொற்றியூர் காவல் நிலையத்தில்- 2

ரவுடியின் கூட்டாளி கைது
சென்னை புளியந்தோப்பு சூளை அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேஷ் (எ) ஜங்கிலி கணேஷ் (32). இவர் மீது 4 கொலை, 10 கொலை முயற்சி  மற்றும் வழிப்பறி உள்ளிட்ட 26 வழக்குகள் உள்ளன. இவர் 9 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2013ம் ஆண்டு புளியந்தோப்பு  டிகாஸ்டர் சாலையில் விஜி என்பவரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ளார். இந்நிலையில், விஜியின் கூட்டாளிகள் சங்கிலி கணேசை  கொலை செய்ய திட்டம் தீட்டி வந்தனர். இந்த தகவல் ஜங்கிலி கணேசுக்கு தெரியவந்தது.

இதையடுத்து, தன்னை கொலை செய்ய திட்டம் போட்டவர்களை  தீர்த்துகட்ட கணேஷ் நேற்று இரவு பயங்கர ஆயுதங்களுடன் தனது கூட்டாளியான டி.பி.சத்திரத்தை சேர்ந்த சந்தோஷ் ராஜா (30) என்பவருடன் புளியந்தோப்பு  பகுதிக்கு வந்துள்ளார். இதுகுறித்த ரகசிய தகவல் புளியந்தோப்பு போலீசாருக்கு வந்தது. சம்பவ இடம் சென்ற அவர்கள் மறைந்திருந்து ஜங்கிலி கணேசை  துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்தனர். இருப்பினும், சந்தோஷ் ராஜா போலீசாரிடம் இருந்து தப்பி ஓடி விட்டார்.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-03-2019

  19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mylai_kabal1

  பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

 • parade_eye1

  புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

 • newattack

  நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

 • siva_muthu12

  காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்