SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அண்ணா தொழிற்சங்க பேரவையில் ரூ8 கோடி மோசடி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி அதிரடி கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

2018-08-13@ 01:28:50

சென்னை: அண்ணா தொழிற்சங்கத்தில் ரூ8 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னசாமியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி. அதிமுகவை சேர்ந்த இவர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராக பதவி வகித்து வந்தார். ஜெயலலிதா இறப்புக்கு பின், அதிமுக இரண்டாக உடைந்தது. அதில் டிடிவி தினகரன் அணியில் சின்னசாமி உள்ளார். அதைத்தொடர்ந்து எடப்பாடி அணியினர் சின்னசாமியை அண்ணா தொழிற்சங்க செயலாளர் பதவியில் இருந்து நீக்கினர். அதன்பின் அண்ணா தொழிற்சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்தபோது, அதில் ரூ8 கோடி கையாடல் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து எடப்பாடி அணியினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி மீது புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், சின்னசாமி அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்தபோது, முறைகேடான வகையில், ரசீது, உறுப்பினர் அடையாள அட்டை மூலம் ரூ8 கோடி கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் சின்னசாமியை கோவையில் நேற்று கைது செய்தனர். தற்போது சின்னசாமி டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளராக உள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்