SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வழக்கை திசை திருப்பும் முயற்சியை தடுத்து சிலை கடத்தல் காரர்களை தண்டிக்க வேண்டும் : மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

2018-08-13@ 01:23:25

சென்னை: “சிலை கடத்தல் விவகாரத்தில் நேர்மையான, ஒரு சார்பற்ற முறையில் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கை: கோயில்களில் நடைபெறும் சிலை திருட்டு கடத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதும், தண்டிப்பதும் மேலும் இதுபோன்ற சம்பவம் நடவாமல் தடுப்பதும் மிக மிக முக்கியமான ஒன்று. ஸ்ரீரங்கம் கோயில் பிரச்னை சம்பந்தமாக முழு விசாரணை நடத்தப்படவேண்டும். உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஸ்ரீரங்கம் கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. பொதுவாக அறங்காவலர்கள் நியமிக்கப்படும் போது அரசியல் சார்ந்து அல்லது அரசியல் சாராதவர்கள் நியமிக்கப்படும் பொழுது ஆதாயம் கருதியோ, ஆடம்பரத்திற்காகவோ அப்பொறுப்புகளை வகிப்பது பலநேரங்களில் நடந்துள்ளது.

ஆனால் வேணு சீனிவாசன், ஆலயங்களின் மேம்பாட்டிற்காகவும், மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும் பல கோடி ரூபாய்களை செலவு செய்து கொண்டிருப்பவர். அப்படிப்பட்ட ஒருவரையும் இவ்வழக்கில் குற்றம் சாட்டி இருப்பது உண்மை குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைகிறதோ? அல்லது வழக்கை திசை திருப்பும் முயற்சியோ? என பக்தர்களை கருத வைத்துள்ளது. எனவே இவ்வழக்கை நேர்மையான, ஒரு சார்பற்ற முறையில் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்