SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இ-சேவை மையத்தில் போலி கார்டு தயாரிப்பு ஸ்மார்ட் கார்டு அச்சடித்து வழங்கும் பணி நிறுத்தம்: பொருட்கள் வாங்க முடியாமல் திண்டாடும் மக்கள்

2018-08-13@ 01:22:39

சென்னை: இ-சேவை மையத்தில் போலி கார்டு தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளால் ஸ்மார்ட் கார்டு அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால்,  பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்க அரசு முடிவு செய்தது. இதற்கான பணிகளில் அதிகாரிகள் முழு வீச்சில் ஈடுபட்டனர்.   கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் திருவள்ளூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.  தொடர்ந்து, தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை விரிவுப்படுத்தினர்.

அதன்படி, குடும்ப அட்டைத்தாரர்களின் விவரங்கள் அந்தந்த எல்லைக்குட்பட்ட ரேஷன் கடைகளில் சேகரிக்கப்பட்டு ஸ்மார்ட் கார்டுகள் அச்சடிக்கும் பணிகள்  நடந்து வந்தன. புதிதாக அச்சடிக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் பல்வேறு குளறுபடிகள் இருந்தன. குறிப்பாக, வயதானவர்களின் ஸ்மார்ட் கார்டுகளில் நடிகைகளின்  போட்டோ இருந்தது. பலரது பாலினம் தவறாக அச்சடிக்கப்பட்டிருந்தது. வயது, முகவரியும் தவறாக இருந்தன. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டபோது, தவறை சரி செய்து தருவதாக உறுதியளித்தனர். ஆனால், பலருக்கு இதுவரை  ஸ்மார்ட் கார்டில் திருத்தம் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில், ஸ்மார்ட் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மட்டும்தான் ரேஷன் பொருட்கள்  வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் அறிவித்தார். பெரும்பாலானோருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டாத நிலையில் அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு கடும்  எதிர்ப்பு கிளம்பின.

இதன் எதிரொலியாக, தான் எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை என்று பல்டி அடித்தார். மேலும், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி  துரிதமாக நடந்து வருகிறது. அனைவருக்கும் விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுவிடும் என்று கூறினார். ஆனால், இதுவரை 70% மேற்பட்டோருக்கும்  மட்டுமே ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஸ்மார்ட் கார்டுகளுக்கு விவரங்களை எளிதாக பதிவு செய்ய இ-சேவை மையங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்பட்டது. அங்கிருக்கும்  ஊழியர்கள் சிலர் பொதுமக்கள் தகவல்களை திருடி அவர்களின் பெயரில் பலருக்கு போலியான அடையாள அட்டை வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த  போலி ஸ்மார்ட் கார்டை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால், சம்பந்தப்பட்ட அட்டைத்தாரர்கள் வந்ததால், நீங்கள்  பொருட்கள் ஏற்கனவே வாங்கிவிட்டதாக கூறி திருப்பி அனுப்புவதால் ஏழை, எளிய மக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். மேலும்,  பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

கடந்த 31.05.2018படி ஒரு கோடி 96 லட்சம் 16 ஆயிரத்து 93 அட்டைகள் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது.  போலி ஸ்மார்ட் கார்டு தயாரிப்பு மற்றும் பல்வேறு  முறைகேடுகளால் மீதமுள்ள சுமார் 30% மக்களுக்கு ஸ்மார்ட் கார்டு அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.  இதுகுறித்து அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘‘இ-சேவை மையங்களில் போலி ஸ்மார்ட் கார்டு அச்சடிக்கும் பணி மற்றும் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக  புகார்கள் வந்தன. விசாரணையில்,  இ-சேவை மையத்துக்கு ஸ்மார்ட் கார்டு பணிக்காக வரும் பொதுமக்களின் தகவல்களை திருடி போலி ஸ்மார்ட் கார்டு  தயாரித்து அதன்மூலம் பொருட்களை வாங்கி சென்றது தெரிந்தது. இதேபோல், பல முறைகேடுகள் நடந்துள்ளன. இதை தவிர்ப்பதற்காக ஸ்மார்ட் கார்டு  அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணி தொடங்கும். இதற்கான ஆலோசனை கூட்டமும் நடந்துள்ளது. அதில், ஸ்மார்ட் கார்டு வழங்கும்  பணி சென்னையில் உள்ள உதவி கமிஷனர் அலுவலகத்தில் மட்டும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்