SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானைகள் தின கொண்டாட்டம் : பார்வையாளர்கள் மகிழ்ச்சி

2018-08-13@ 01:21:39

சென்னை: உலக யானைகள் தினத்தை முன்னிட்டு, வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் மத்தியில் யானைகளுக்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டது. வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, யானை, மான்கள் உள்ளிட்ட பல விலங்குகளும், பறவைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உலக யானைகள் தினத்தை முன்னிட்டு பூங்கா நிர்வாகம் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது, பார்வையாளர்கள் மத்தியில் யானைகளுக்கு சிறப்பு உணவுகளாக ராகி, சாப்பாடு, வெல்லம், உப்பு, பப்பாளி, தேங்காய், கரும்பு, வாழைப்பழம், சூரணம் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுகள் வழங்கப்பட்டன.

வழக்கமாக, பூங்காவில் யானைகள் அடைப்பிடத்தில் வைத்துதான் யானைகளுக்கு உணவு வழங்கப்பட்டு  வந்தன. ஆனால் நேற்று உலக யானைகள் தினத்தை முன்னிட்டு, பார்வையாளர்கள் மத்தியில் யானைகளுக்கு சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டது. பூங்காவுக்கு நேற்று வந்த பார்வையாளர்கள் மற்றும் குழந்தைகள் ஏராளமானோர் யானைகளுக்கு அருகிலேயே உணவு வழங்கப்பட்டதை கண்டுகளித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்