SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யாருடைய தூண்டுதலின் பேரில் வேணுசீனிவாசன் மீது வழக்கு? : அரசுக்கு முத்தரசன் கேள்வி

2018-08-13@ 01:20:27

சென்னை: யார் தூண்டுதலின் பேரில் டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் மீதான வழக்கு பதியப்பட்டுள்ளது என்று தமிழக அரசிடம் முத்தரசன் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தனியார் நிறுவனங்களில் முன்மாதிரி நிறுவனமாக விளங்கி வரும் டிவிஎஸ் நிறுவனத்தின் குழும தலைவர் வேணுசீனிவாசன் மீது, கோயில் சிலை கடத்தல் வழக்கு பதிவு செய்திருப்பது வியப்பாக உள்ளது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் திருப்பணிக்கு அவர் ரூ70 லட்சம் வழங்கியுள்ளார். திருவரங்கம் கோயில் அறக்கட்டளை தலைவராக உள்ளதுடன் அக்கோயில் கும்பாபிஷேக பணிகளுக்கு ரூ25 கோடி நிதியும் வழங்கியுள்ளார்.

மேலும், பல கோயில்களுக்கு நிதி வழங்கியதுடன், பல்வேறு பொதுப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டுள்ளார். அவ்வாறு இருக்க கோயில் சிலை மாயமான வழக்கில் அவரை சேர்த்திருப்பது உள்நோக்கம் உடையதாக தெரிகிறது. யாருடைய தூண்டுதல் பேரில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது விசாரணைக்கு உட்படுத்திட வேண்டும். வேணுசீனிவாசன் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெறுவதுடன், சிலைகள் கடத்தல் வழக்குகளில் அப்பாவிகள், அதிகாரிகள் மீது வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் வழக்குகள் பதிவு செய்திருந்தால் அவைகள் திரும்ப பெறப்பட்டு, உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2018

    14-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • asiya_mukesh11

    ஆசியாவை ஆட்டம் காண வைத்த முகேஷ் அம்பானி மகள் திருமணம்

  • kali_ramnatha11

    மியான்மரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : ரீ காளி கோவிலுக்கு சென்று வழிபட்டார்

  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்