SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுபான்மையினர் தேசிய கமிஷனுக்கு அரசியல் சட்ட அந்தஸ்து வழங்க வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

2018-08-13@ 00:59:41

சென்னை: எஸ்.டி.பி.ஐ.கட்சியின் தேசிய செயலகக்கூட்டம் சென்னையில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது. தேசிய தலைவர் எம்.கே.ஃபைஜி தலைமை தாங்கினார். கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: பாலியல் வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகள் மகளிர் விரைவு நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டு, கடும் தண்டனை வழங்க வேண்டும்.

தேசிய மனித உரிமைகள் கமிஷன், தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷனுக்கு அரசியல் சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டது போல், தேசிய சிறுபான்மையினர் கமிஷனுக்கும் அரசியல் சட்ட அந்தஸ்து வழங்க வேண்டும். சிறுபான்மையானருக்கு பாதுகாப்பு வழங்கவும், நீதி நிலைப்பெறச் செய்யவும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கை நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

  • dangerrrkerala123

    கேரளாவில் கனமழை - மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்களின் துணிகர செயல்கள்

  • armyyyyyy122233

    கேரளாவில் கன மழைக்கு 167 பேர் பலி : மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்