SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் கழுத்தை அறுத்து மனைவி படுகொலை: லாரி டிரைவர் கைது : அனாதையான குழந்தைகள்

2018-08-13@ 00:58:20

சென்னை: கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்த சம்பவம் பள்ளிக்கரணையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுகந்தி (32). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த லாரி டிரைவர் ஐயப்பன் (40) என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு ஜெயந்தி, வர்ஷினி என்ற 2 குழந்தைகள் உள்ளன. ஐயப்பன் லாரி டிரைவர் என்பதால், பெரும்பாலான நாட்கள் வெளியூர்களுக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக சுகந்திக்கு அதே பகுதியை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் (25) என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் சுகந்தி தன்னுடைய  குழந்தைகள் இருவரையும் அழைத்து வந்து முஜிபுர் ரஹ்மானுடன் சேர்ந்து, பள்ளிக்கரணை நாராயணபுரம் காந்திநகர் 1வது தெருவில் குடும்பம் நடத்தினார். இதனால் கோபித்து கொண்ட கணவர் ஐயப்பன் மனைவியை பிரிந்து சென்று தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பாக, முஜிபுர் ரஹ்மானை அவரது உறவினர்கள் அழைத்து சென்றுவிட்டனர்.

இதைத்தொடர்ந்து சுகந்திக்கு அதே பகுதியில் உள்ள மேலும் பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தான் தனியாக இருப்பதாக கணவர் ஐயப்பனிடம் சொல்லி குடும்பம் நடத்த வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். கணவன் மீண்டும் தன்னுடன் வந்து தங்கினாலும், சுகந்தி பல ஆண்களுடனான தொடர்பை நிறுத்தவில்லை. மனைவியின் கள்ளத்தொடர்பு ஐயப்பனுக்கு தெரிய வந்ததும் மனம் உடைந்த ஐயப்பன், ‘இனியாவது திருந்து. நல்லபடியாக குடும்பம் நடத்துவோம். ஆண்களுடன் வைத்து உள்ள தொடர்பை நிறுத்திக்கொள்’ என கேட்டுக்கொண்டார். சுகந்தியும் திருந்தி வாழ்வதாக உறுதி அளித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் சுகந்தி ஒருவருடன் உல்லாசமாக இருப்பதை ஐயப்பன் நேரில் பார்க்க நேர்ந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இனியும் மனைவியை விட்டுவைக்க கூடாது என்று முடிவெடுத்து, அவரை கொலை செய்வது என திட்டமிட்டு, வாய்ப்புக்கு காத்திருந்தார். அதன்படி நேற்று முன்தினம் மாலை குழந்தைகளை விளையாடுவதற்கு வீட்டை விட்டு வெளியே அனுப்பி வைத்தார். பின்னர், வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் சுகந்தியின் கழுத்தை துடிக்க துடிக்க அறுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர், ஐயப்பன் அங்கிருந்து தப்பிச்சென்றார். குழந்தைகள் இருவரும் இரவு 8.30 மணிக்கு வீட்டுக்கு வந்தபோது, தாய் சுகந்தி கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, கதறி அழுதனர். இவர்களது அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பள்ளிக்கரணை போலீசாருக்கு தெரிவித்தனர். தகவலறிந்து பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுகந்தி சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கணவன் ஐயப்பனை வலைவீசி தேடினர். இதற்கிடையே வேளச்சேரி போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த ஐயப்பனை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ஐயப்பன் மனைவியை கொலை செய்துவிட்டு வந்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஐயப்பனை போலீசார் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தாய், தந்தையை இழந்த இரு பெண் பிள்ளைகளும் தவித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-03-2019

  19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mylai_kabal1

  பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

 • parade_eye1

  புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

 • newattack

  நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

 • siva_muthu12

  காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்