SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தண்ணீரின் தேசம்

2018-08-13@ 00:56:06

கடவுளின் தேசம் என வர்ணிக்கப்படும் கேரளாவில் எப்போதுமே இயற்கையின் கொடைகள் ஏராளம். வருண பகவான் வஞ்சனையின்றி வாரி வழங்கும் மாநிலங்களில் கேரளாவுக்கு முக்கிய இடம் உண்டு. வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவமழை என  இரண்டு பருவமழைகளுமே 6 மாத இடைவெளியில் கேரளாவில் வெளுத்து கட்டும். கேரள மக்களால் ‘இடவபாதி மழை’ என பேரன்போடு அழைக்கப்படும் தென்மேற்கு பருவமழை இவ்வாண்டு அவர்களுக்கே பெரும் பாதிப்பாகி விட்டது. எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு, ஆலப்புழா, வயநாடு என பல மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. ஓடுகிற ஆறுகளில் எல்லாம் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சாலைகள், கட்டிடங்கள், குடியிருப்புகள் என தாழ்வான பகுதிகளை வெள்ளம் கபளீகரம் செய்து வருகிறது. உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக பொதுமக்கள் முகாம்களில் தஞ்சம் அடையும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 410 அடி உயரத்தில் காணப்படும் இடுக்கி அணையே நிரம்பி வழிகிறது. கேரள வரலாற்றில் இதுநாள் வரை இல்லாத அளவுக்கு இவ்வாண்டு 24 அணைகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மலையும், பள்ளங்களும் நிறைந்த கேரளாவில் இயற்கையாகவே வீடுகள் மேடான பகுதிகளில் அமைக்கப்படுவதுண்டு. இப்போது பெய்யும் கனமழையில் அடிக்கடி நிகழும் நிலச்சரிவுகள், பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. கேரள மழை வெள்ளத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் மாநில அரசும் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. பலியானோர், காயம் அடைந்தவர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்கிய அரசு, உயிர் காக்கும் படகுகள் மற்றும் உயிர் காக்கும் ஆடைகளை வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு வழங்கி வருகிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன் வெள்ள பாதிப்பு பகுதிகளை உடனுக்குடன் பார்வையிட்டு தேவையான நிவாரண உதவிகளை செய்து வருகிறார்.

ராணுவம், கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட்பு படை ஆகியவற்றை வரவழைத்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். கனமழை வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் கேரள அரசு முனைப்பு காட்டி வருகிறது. முகாம்களில் உள்ளவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இயற்கை பேரிடர்களில் கேரளாவை பார்த்து நாம் சில விஷயங்களை கற்றுக் கொண்டாக வேண்டும். கனமழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கேரள அரசு மேற்கொள்ளும் விதம் முக்கியமானது. வெள்ளம் விரைந்தோடும் பகுதிகளில் முதல்வரும், அமைச்சர்களும் களம் இறங்கும்போது, அரசு இயந்திரம் தானாகவே களமிறங்குவதை காண முடிகிறது. பேரிடர் காலங்களில் மக்களுக்கு உயிர் காக்கும் தோழனாக அரசு இருப்பது அவசியம் என்பதே கேரள கனமழை நமக்கு சொல்லும் பாடமாகும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-02-2019

  16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • BrightBrussels

  ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

 • francelemon

  பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

 • TitanicReplicaChina

  முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

 • train18modi

  டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்