SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சியாச்சினில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் உடை, உபகரணங்கள் தயாரிப்பு இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்

2018-08-13@ 00:52:22

புதுடெல்லி: சியாச்சின் பனிமலையில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கான உடை மற்றும் உபகரணங்கள் தயாரிக்கும் திட்டத்திற்கான இறுதிக்கட்ட பணிகளில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. உலகின் மிக உயர்ந்த போர்க்களமாக சியாச்சின் காணப்படுகின்றது. சியாச்சின் பனிமலையில், கடல்மட்டத்தில் இருந்து 16,000 அடி முதல் 20,000 அடி உயரத்தில் பாதுகாப்பு பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு குளிரை தாங்கும் உடை, மலையேற்ற கருவிகள் மற்றும் தேவையான உபகரணங்களை இந்திய ராணுவம் வழங்கி வருகின்றது. இவை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் சுவிட்சர்லாந்தில் இருந்து வாங்கப்படுகின்றன. இதற்காக ஆண்டுதோறும் ரூ.800 கோடி செலவு செய்யப்பட்டு வருகின்றது. கடந்த 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சியாச்சின் வீரர்களுக்கு வழங்கப்படும் உபகரணங்கள் இரண்டாக வகைப்படுத்தப்படுகின்றது. 9000 அடி முதல் 12,000 அடி வரை பணியில் இருக்கும் வீரர்கள் மற்றும் 12,000 அடிக்கு மேல் பணியில் இருக்கும் வீரர்கள் என இரண்டாக வகைப்படுத்தப்பட்டு அதற்கு ஏற்றார்போன்று உடை,  உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் வீரர்களுக்கான உடை, உபகரணங்கள் உள்ளிட்டவற்றை உள்நாட்டிலேயே தயாரித்து பயன்படுத்த ராணுவம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.300 கோடி மிச்சமாகும். ஆனால் நீண்ட நாட்களாக இந்த திட்டம் நிலுவையில் இருந்து வருகின்றது. இந்நிலையில் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான இறுதி கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “சியாச்சின் பனிமலையில் உள்ள வீரர்களுக்கு தேவைப்படும் பொருட்களை தயாரிப்பதற்கான திட்டம் குறித்து ஏறக்குறைய இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தனியார் உதவியுடன் இந்தியாவிலேயே இந்த பொருட்கள் தயாரிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் தெர்மல் இன்சோல், பனிக் கண்ணாடி, பூட்ஸ், பனியில் சிக்கியவர்களை கண்டறியும் கருவி, பனி கோடாரி, தூங்குவதற்கான உறைகள் உள்பட வீரர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் உற்பத்தி செய்யப்படும்” என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்